கணவரை விட அதிக சொத்து வைத்திருக்கும் காஜல் அகர்வால்.. ஆண்டு வருமானம் இத்தனை கோடியா?

 நடிகை காஜல் அகர்வால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு படத்திற்கு மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு அவர் நடிப்பதை குறைத்துக் கொண்ட போதிலும் அவருக்கு வருடத்திற்கு பத்து கோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

kajalநடிகை காஜல் அகர்வாலிடம் தற்போது 86 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் ஒரு தெலுங்கு மற்றும் ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டு இருப்பதாக கூறப்பட்டாலும் அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

விஜயகாந்த் ஜோடியாக மட்டும் 6 படங்கள்.. நடிகை விஜி வாழ்க்கையில் விளையாடிய விதி..!

எனவே கணவர், குழந்தை என இல்லத்தரசியாக அவர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காஜல் அகர்வால் தற்போது வருடத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அது விளம்பரத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நிறுவனங்களின் விளம்பரத்திற்கு அவர் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வசூலித்ததாகவும் அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து மட்டும் அவருக்கு எட்டு கோடி வரை வருவாய் வருவதாகவும் எனவே மொத்தத்தில் அவருக்கு ஆண்டுக்கு 10 கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நடித்தும் பிளாப் ஆனா 5 படங்களின் லிஸ்ட் இதோ…

நடிகை காஜல் அகர்வால் ரூபாய் ஆறு கோடி மதிப்பில் மும்பையில் சொந்த வீடு வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் திருமணத்திற்கு பிறகு ஆடம்பரமான வீட்டை ஒன்றை வாங்கினார் என்பதும் அதில் தான் தற்போது இருவரும் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

kajal aggarwal stills photos pictures 2075

காஜல் அகர்வாலிடம் மொத்தம் விலை உயர்ந்த மூன்று கார்கள் உள்ளன.  முதலாவதாக ஆடி ஏ4 கார். இந்த  காரின் விலை 42.35 லட்சம் ரூபாய். இரண்டாவதாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார். இந்த எஸ்யூவியின் விலை 88.24 லட்சம். மூன்றாவதாக ‘ஸ்கோடா ஆக்டேவியா’ என்ற காரை அவர் வைத்துள்ளார். இந்த காரின் விலை இந்தியாவில் 26.80 லட்சம் ஆகும்.

அதே போல் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிச்சுலு ஒரு தொழிலதிபர். அவருக்கு ரூபாய் 50 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவர் கௌதம் என்பவர் இகாமர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அதுமட்டுமின்றி அவர் ஒரு இன்டீரியர் டிசைன் செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து மட்டும் அவருக்கு மாதம் லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.

52 வயது ஆகியும் திருமணம் செய்யாத அஜித் நாயகி.. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

மொத்தத்தில் காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலகினாலும் அவருடைய வருமானம் மட்டும் குறையவில்லை. சராசரியாக அவருக்கும் அவருடைய கணவருக்கும் சேர்த்து மாதம் இரண்டு கோடிக்கு மேல் வருமானம் வருவதாக கூறப்படுகிறது.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews