நயன்தாராவிற்கு முன்பே திருமண வீடியோவை பல கோடிகளுக்கு விற்ற நடிகை புன்னகை அரசி!

Published:

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்ற போற்றப்படும் நடிகை சினேகாவின் பூர்வீகம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி. ஆனால் அவர் சில காலம் நெய்வேலியில் வசித்து வந்தார் என கூறப்படுகிறது. சுகாசினி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை சினேகா திரை வாழ்க்கைக்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

சினேகா கேரளாவில் நடைபெற்ற மலையாள ஸ்டார்னைட் என்ற இரவு நிகழ்ச்சிக்கு சென்ற போது தான் அவருக்கு முதலில் மலையாள திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த ஒரு இரவு பார்ட்டி தான் தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டதாக பேட்டி ஒன்றில் சினேகா கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீல பக்க்ஷி என்ற திரைப்படத்தின் மூலம் டான்சராக அறிமுகமாகமானார் சினேகா. ஆனால் முதல் படமே தோல்வி படமாக அமைந்தது. மலையாள சினிமாவெல்லாம் நமக்கு ஒத்து வராது என நினைத்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்க முயற்சி செய்து வந்த போது குமுதம் பத்திரிகையில் விரும்புகிறேன் படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு ஒன்று வெளியானது.

அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த சினேகா உடனடியாக அந்த தேர்வுக்கு விண்ணப்பித்ததோடு அதில் வெற்றி பெற்று அவர் தமிழ் சினிமாவிற்குள் நுழைய பெரும் வாய்ப்பாக அமைந்தது.

விரும்புகிறேன் படத்தில் நடிகர் பிரசாந்த் உடன் நடித்தது தான் இவரின் முதல் படம் என்ற போதும் அந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் அதன் பிறகு இரண்டாவதாக நடித்த என்னவளே என்ற திரைப்படம் தான் முதலில் திரைக்கு வந்து சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது.

அதன் பிறகு ஆனந்தம், உன்னை நினைத்து,ஏப்ரல் மாதத்தில் போன்ற ஏராளமான வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பையும், வசீகர சிரிப்பையும் காட்டி ரசிகர்களை கவர்ந்ததால் இவர் புன்னகை அரசி என்றே அனைவராலும் போற்றப்பட்டார்.

ஆனந்தம் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற இவருக்கு இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் மாபெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

சினேகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்களில் பார்த்திபன் கனவு என்ற திரைப்படம் தனி இடத்தைப் பிடித்தது என்றே சொல்லலாம். அதை தொடர்ந்து அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஏற்பட்டு பிறகு அது காதலாக மாறியது.

பிரசன்னா, சினேகாவின் காதல் திருமணம் வரை சென்ற நிலையில் 2012 ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு விகான் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நடிகர் பிரசன்னாவும் நடிகை சினேகாவும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் பிரசன்னா தனது குடும்ப முறைப்படி ஒரு திருமணமும், சினேகா குடும்ப முறைப்படி ஒரு திருமணம் என இரு திருமணங்கள் செய்ததோடு இரண்டு முறை தாலியும் கட்டினார்.

நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை பல கோடி ரூபாய்க்கு விற்று விட்டார் என்று தற்போது பெரிதாக பேசப்படும் நிலையில் அந்த காலத்திலேயே நடிகை சினேகா தனது திருமண வீடியோவை மூன்று கோடி ரூபாய்க்கு மேல் சில தனியார் ஒளிபரப்பு நிறுவனங்களிடம் விற்று விட்டதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழ்நாடு அரசு விருது பிலிம் பேர் விருது, நந்தி விருது, விஜய் விருது போன்ற ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேசக்கூடிய வெகு சில நடிகைகளில் சினேகாவும் ஒருவர் என்பது அவரின் தனிச்சிறப்பு.

மேலும் உங்களுக்காக...