டிசம்பர் 22ல் ரிலீஸ் ஆகும் ‘கனெக்ட்’ படத்தின் விமர்சனம் இதோ!

Published:

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நேற்றிரவு பத்திரிக்கையாளர் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

நயன்தாரா மற்றும் வினய் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் நயன்தாராவின் அப்பா சத்யராஜ் ஆகியோர் குடும்பத்துடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வேகமாக பரவுகிறது.

இந்நிலையில் மருத்துவர் வினய் தன்னை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒருகட்டத்தில் அவருக்கே திடீரென தொற்று பரவி அதில் அவர் இறந்துபோகிறார்.

connect

இதனால் நயன்தாராவின் மகள் மிகவும் வருத்தத்துடன் இருக்கும் நிலையில் அப்பாவிடம் பேச வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இதனையடுத்து சூனியக்காரி ஒருவரின் முயற்சியுடன் இறந்துபோன வினய்யுடன் பேச முயற்சிக்கும் போது திடீரென ஒரு விபரீதம் ஏற்படுகிறது. அந்த விபரீதம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.

சூசன் என்ற கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வகையில் நயன்தாரா நடித்துள்ளார் என்பதும் அவர் குழந்தையை காப்பாற்றிய ஆக வேண்டும் என்று பரிதவிக்கும் காட்சிகளில் நடிப்பில் மிளிர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் கணவராக வரும் வினய்க்கு ஒரு சில காட்சிகள் என்றாலும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது. நயனின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ் பேத்தியை காப்பாற்றிய எடுக்கும் முயற்சிகள் நயனிடம் சில விஷயங்களை விளக்கும் தன்மை ஆகியவை அவருடைய முதிர்ச்சியான நடிப்பு வெளிப்பட்டுள்ளது.

மாயா படத்தை எடுத்த அஸ்வின் சரவணன் இந்த படத்தையும் த்ரில் கதையம்சம் கொண்ட படமாக வடிவமைத்திருக்கிறார். மாயா போலவே இதுவும் பேய் படமாக இருந்தாலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் உள்பட டெக்னீசியன் அனைவரும் மிகவும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். எனவே கனெக்ட் திரைப்படம் நயன்தாராவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...