நயன்தாராவுக்கு மீண்டும் ராஜா ராணி மேஜிக்கை கொடுக்குமா அன்னபூரணி!.. எக்ஸ்க்ளூசிவ் பிக்ஸ் ரிலீஸ்!..

Published:

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75வது படமான ‘அன்னபூரணி வரும் டிசம்பர் 1, 2023 அன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து இப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அன்னபூரணி படத்தை ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரர்க்டர் நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் எனப் படக்குழு தெரிவித்துள்ளனர்.

F hNco5aYAArL8K

நயன்தாராவின் அன்னபூரணி ரிலீஸ் தேதி:

கோலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா இருக்கிறார். இவர், தமிழில் ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அவர் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து, விஜய், அஜித் ,சூர்யா, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற பலருடன் சேர்ந்து ஜோடியாக நடித்து விட்டார். கடைசியாக பாலிவுட் வரை சென்று ஷாருக்கானுடனும் ரொமான்ஸ் செய்துவிட்டார் . இப்போது கமலின் 234வது படத்திலும் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

நடிப்பது மட்டுமல்லாமல் பெண்களுக்காக புதிதாக பிஸ்னஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். முதலில் அழகு சார்ந்த பொருட்களில் ஆரம்பித்து தற்போது பெண்கள் உபயோகிக்கும் நாப்கின் வரை விற்கிறார்.

F hNco5bAAAYWLl

ஜவான் தந்த வெற்றி:

ஜவான் படத்தில் நடித்து அவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை பாலிவுட்டிலும் நிருபித்திவிட்டார். ஜவான் பெறிய அளவில் வெற்றியடைந்ததற்க்கு நயன்தாராவும் ஒரு காரணம். சில வருடங்களாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நயந்தாரா அடுத்து அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவையாக தயாராகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் தொடங்கும் இந்த டீசரில், அக்ரஹாரத்தில் சிறிய வீட்டில், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வழிபாடுகளில் மும்முரமாக இருக்கும்போது, நயன்தாரா நிர்வாகம் மற்றும் வணிகம் தொடர்பான புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பது போன்று இருந்தாலும், உண்மையில் ஒரு சிக்கன் டிஷ் எப்படி செய்வது என்ற செய்முறையைப் படித்து கொண்டிருக்கிறார்.

F gmKiFWEAAMzZv

ராஜா ராணி மேஜிக்:

மேலும் இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்தின் டீசரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நயந்தாரா, “அன்புள்ள நிலேஷ் கிருஷ்ணா உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். சினிமாவின் மேல் உள்ள உங்கள் ஆர்வம் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும்!! உங்கள் திறமையை எல்லாரும் பார்ப்பதர்கான நேரம் வந்துவிட்டது . உங்கள் அற்புதமான சிந்தனை அடங்கிய காட்சிகளை உலகம் காண இனி காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவின் அன்னபூரனி படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி நயன்தாராவுக்கு கம்பேக் படமாக அமைந்த நிலையில், கோலிவுட்டில் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நயன்தாராவுக்கு 75வது படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...