இரட்டை குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடும் நயன்தாரா!

Published:

தென்னிந்திய திரையுலகின் கனவு கன்னியாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் முன்னணி நடிகை நயன்தாரா. சரத் குமாருடன் இணைந்து ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்த படங்களில் விஜய், அஜித், ரஜினி என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் நயன்தாரா தற்பொழுது இந்தியில் தனது முதல் பாடமான ஜாவான் படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்துள்ளார். அதை தொடர்ந்து அகமத் இயக்கத்தில் இறைவன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இது மட்டுமல்லாமல் ஜெயம் ரவியுடன் ஒரு படமும், நிலேஷ் கிருஷ்ணாவின் படத்திலும், அடுத்ததாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

தனது கடின உழைப்பின் மூலம் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் ஜீன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

அதை அடுத்த சில மாதத்தில் வாடகைத் தாய் மூலம் நயன்தாரா அம்மா ஆனார், அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளது. உலகம் மற்றும் உயிர் என அந்த குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் நயன்தாரா அவ்வப்போது தனது குழந்தைகளுக்கான நேரத்தை செலவிடுவதும் வழக்கம்.

nay ku

அந்த வகையில் தனது இரட்டை குழந்தையுடன் குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடும் நயன்தாராவின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் குழந்தை உயிர் நயனின் கைகளுக்கு நடுவில் படுத்து கொண்டு தங்க ஆபரணத்துடன் விளையாடி கொண்டுள்ளது போல அமைந்துள்ளது.

100 படங்களில் நடித்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை சித்தாரா!

இதை பார்க்கும் போது நடிகை நயன்தாரா குழந்தையுடன் குழந்தையாக மாறி தனது அன்பான நேரத்தை செலவிட்டு மகிழ்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...