தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய ராதிகாவின் முன்னாள் கணவர்.. பிரதாப் போத்தனின் அறியாத பக்கங்கள்..!

Published:

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் தேசிய விருது பெற்ற திரைப்படத்தை கடந்த 1984ஆம் ஆண்டு இயக்கி உள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவலாகும்.

கேரளாவைச் சேர்ந்த பிரதாப் போத்தன் சிறுவயதிலேயே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவுடன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் திரை வாய்ப்புகளை தேட சென்னை வந்தார்.

கோடிக்கணக்கில் சம்பாத்தியம்.. சில படங்கள் தயாரிப்பு.. நடுத்தெருவுக்கு வந்த பிஎஸ் வீரப்பா..!

prathap pothan 1

இந்த நிலையில் தான் அவருக்கு சில மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் தமிழில் ‘அழியாத கோலங்கள்’ என்ற படத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து ‘இளமை கோலம்’ என்ற படத்தில் நடித்தாலும் ‘மூடுபனி’ படம்தான் அவரை ஒரு நடிகராக ரசிகர்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனை அடுத்து ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கரை எல்லாம் செண்பகப்பூ’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகன் மற்றும் முக்கிய கேரக்டர்களின் நடித்தார்.

prathap pothan3

கடந்த 1985ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதே ஆண்டு அவர் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை நடிகை ராதிகாதான் தயாரித்திருந்தார்.

கமல், ரஜினியுடன் வெற்றிப்படங்கள்.. 33 வயதில் திடீரென மாறிய நடிகை மாதவி..!

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 32வது தேசிய விருதுகள் பட்டியலில் தமிழில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்றது. மனநிலை சரியில்லாத ஹீரோ, ஹீரோயின் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஐந்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து பிரதாப் போத்தன் மீண்டும் சில படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘ஜீவா’ மற்றும் கமல்ஹாசன், பிரபு நடித்த ‘வெற்றி விழா’ ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. மேலும் ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘மகுடம்’, ‘ஆத்மா’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘லக்கி மேன்’ உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

prathap pothan2

இந்த நிலையில் நடிகை ராதிகாவை 1985ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே ஆண்டில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர் 1990ஆம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த நடிகை.. உச்சத்தில் புகழ்.. இன்று என்னவாக இருக்கிறார் தெரியுமா?

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தனது கீழ்ப்பாக்கம் வீட்டில் யாரும் அறியாத வகையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் உடல்நல கோளாறால் ஏற்பட்டது என்பது தெரியவந்தது. பிரதாப் போத்தன் மறைந்தாலும் அவரது அப்பாவியான நடிப்பு மற்றும் மிரள வைக்கும் இயக்கம் அனைவர் மனதிலும் இருக்கும்.

மேலும் உங்களுக்காக...