நடிகர் நாகேஷ் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நாயகனாகவும் நடித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ போன்ற சீரியஸான நாயகன் வேடத்தில் நடித்திருந்தாலும், அவர் முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்றால் அந்த படம் தான் சோப்பு சீப்பு கண்ணாடி.
இந்த படம் கடந்த 1968-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி வெளியானது. திருமலை-மகாலிங்கம் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருந்தது. திருமலை-மகாலிங்கம் இயக்கத்தில் ஏற்கனவே நாகேஷ் நடித்த ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ உள்பட ஒரு சில படங்கள் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கமல் பெயர் கமல், ரஜினி பெயர் ரஜினி, நாகேஷ் பெயர் நாகேஷ்.. சொந்த பெயரில் நடித்த படங்கள்..!
டி.கே.ராமமூர்த்தி இசையில் உருவான இந்த படத்தில் விஜய நிர்மலா, நாகேஷ் ஜோடியாக நாயகியாக நடித்திருப்பார். இவர்தான் ‘பணமா பாசமா’ என்ற திரைப்படத்தில் ‘எலந்த பழம் எலந்த பழம்’ என்ற பாடலுக்கு சூப்பராக நடித்தவர். மேலும் இந்த படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம், ஏ.வீரப்பன், ஏ.கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, உசிலமணி, கரிக்கோல் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தின் கதை என்னவெனில் முதல் காட்சியில் ரயிலில் நாகேஷ் மற்றும் அவரது நண்பர் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது அவர்கள் டிக்கெட் எடுக்கவில்லை என்பதால் டிடிஆர் அவர்களை கீழே இறக்கி விடுவார். கீழே இறக்கி விடப்பட்ட ஊரில் ஒரு பொம்மை கடையில் நாகேஷுக்கு வேலை கிடைக்கும்.
அவர் பொம்மைகளை எடுத்துக்கொண்டு ஒரு பெரிய வீட்டிற்கு விற்பனை செய்வதற்காக சென்ற நிலையில் அந்த வீட்டில் எதிர்பாராத விதமாக மாட்டிக் கொள்வார். பூட்டிய வீட்டில் அவர் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வீட்டில் முகமூடி கொள்ளைக்காரர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களை பயமுறுத்திக் கொண்டு இருப்பார்கள். அதன் பிறகு அந்த வீட்டில் என்ன நடந்தது? முகமூடி கொள்ளையர்களை எப்படி நாகேஷ் பிடித்துக் கொடுத்தார் என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.
கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு காரணமானவர்.. சிவாஜியின் நெருங்கிய நண்பர்.. யார் இந்த ஏ.வீரப்பன்..!
ஆரம்ப ரயில் காட்சிகளிலேயே அசத்திய நாகேஷ் அதன் பிறகு பூட்டிய வீட்டிற்குள் அடைக்கப்பட்டவுடன் அவரது நகைச்சுவை நடிப்பு அட்டகாசமாக இருக்கும். நாகேஷ்க்கு இணையாக இந்த படத்தில் ஏ.கருணாநிதி நடித்திருப்பார். அவரது சமையல்காரர் கேரக்டரின் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. 400 படங்களுக்கும் மேல் நடித்த டைப்பிஸ்ட் கோபு ..!
இந்த படத்தில் 3 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
