சமந்தாவின் ஒரு புகைப்படத்தை மட்டும் டெலிட் செய்யாத நாக சைதன்யா.. நெட்டிசன்கள் கேள்வி..!

Published:

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா, சமந்தா குறித்த அனைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் டெலிட் செய்து விட்டாலும் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் டெலிட் செய்யாமல் இருப்பது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதனை அடுத்து நாக சைதன்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா குறித்த அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்தார் என்பதும் சமந்தாவை அன்ஃபாலோ செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

samantha

ஆனால் அதே நேரத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் ரேஸ் கார் ஒன்றில் இருந்து இறங்கி வருவது போன்ற புகைப்படத்தை மட்டும் அவர் டெலிட் செய்யாமல் உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக ’மிஸஸ் அண்ட் தி கேர்ள் பிரண்ட்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த ஒரு பதிவை மட்டும் டெலிட் செய்யாமல் இருப்பது ஏன் என்றும் குறிப்பாக இன்னொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தமான பின்னரும் சமந்தாவின் இந்த புகைப்படத்தை டெலிட் செய்யாமல் ஏன் இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு நாக சைதன்யா ரசிகர்கள் பதிலடியாக ’இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை டெலிட் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பது அவரவர் சொந்த விருப்பம் என்றும் ஒருவருடைய தனிப்பட்ட உரிமையில் ரசிகர்கள் தலையிடுவது நாகரிகம் ஆகாது என்றும் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் சமந்தாவின் இந்த ஒரு புகைப்படத்தை மட்டும் டெலிட் செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இருக்குமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் உங்களுக்காக...