எம்ஆர்.ராதாவின் புகழுக்குக் காரணமாக இருந்த திராவிடக் கழக தலைவர்..! அந்த நாடகம் தான் காரணமா?

திராவிடக் கழகத் தலைவர்களில் சிபி.சிற்றரசு மிக முக்கியமானவர். எப்போ பொதுக்கூட்டங்களுக்கு வந்தாலும் எம்ஆர்.ராதாவை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார். ஒருமுறை எம்ஆர்.ராதாவைப் பார்த்த அவர் என்ன பழைய நாடகங்களையே போட்டுக்கிட்டு இருக்கீங்க? புது…

திராவிடக் கழகத் தலைவர்களில் சிபி.சிற்றரசு மிக முக்கியமானவர். எப்போ பொதுக்கூட்டங்களுக்கு வந்தாலும் எம்ஆர்.ராதாவை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார். ஒருமுறை எம்ஆர்.ராதாவைப் பார்த்த அவர் என்ன பழைய நாடகங்களையே போட்டுக்கிட்டு இருக்கீங்க?

புது நாடகம் போட வேண்டியதுதானே என்று கேட்டார். நீங்க நாடகம் எழுதிக் கொடுங்க. உடனடியாக என்னுடைய நாடகத்தை மாற்றி விடுகிறேன் என்று எம்ஆர்.ராதா சொல்ல, அடுத்த 2 நாள்களில் அங்கேயே உட்கார்ந்து சிபி.சிற்றரசு எழுதிய நாடகம்தான் போர்வாள்.

அந்த நாடகம் எம்ஆர்.ராதாவுக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. அது ஒரு புரட்சிகரமான நாடகமாக இருந்ததால தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாடகத்தைப் பார்த்துட்டுத்தான் தந்தை பெரியாரின் திராவிட கழகத்தில் பல இளைஞர்கள் சேர்ந்தார்கள் என்ற ஒரு தகவலை விகே.ராமசாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடகம் ஒரு கட்சியினுடைய உறுப்பினர்களைப் பெருக்குவதற்கு எந்தளவு உதவி செய்து இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.