நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் வாரிசுகள் பலர் திரையுலகில் சாதனை செய்துள்ளனர் என்பதும் குறிப்பாக எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா ஆகியோர்கள் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் எம்.ஆர்.ராதாவின் இன்னொரு வாரிசு தான் நிரோஷா.
நடிகை நிரோஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவான அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் கார்த்திக் ஜோடியாக நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
பாட்ஷா நடிகர் சேது விநாயகத்தை ஞாபகம் இருக்கிறதா? 100 படங்களுக்கு மேல் நடித்த கலைஞர்!
முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாவது படமே அவருக்கு கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் சூரசம்ஹாரம். சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் உருவான இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

மூன்றாவது படமாக விஜயகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதுதான் செந்தூரப் பூவே. இந்த படத்தில் அவர் ராம்கி ஜோடியாக நடித்திருப்பார். இந்த மூன்று பட வெற்றிகளுக்கு பிறகு அவர் பாண்டி நாட்டு தங்கம், மருதுபாண்டி, காவலுக்கு கெட்டிக்காரன், மனித ஜாதி, அண்ணன் என்னடா தம்பி என்னடா, பாரம்பரியம் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் முதல் மூன்று படங்களைப் போல் அவருக்கு பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் 1995-ம் ஆண்டு நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார். ராம்கி உடன் பல படங்கள் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் உண்டான காதலை எடுத்து இந்த திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் திரையுலகில் நடிக்கவில்லை. 2000 ஆண்டுதான் மீண்டும் ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.

அதன் பிறகு அவர் பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் அம்மா, அக்கா, அண்ணி ஆகிய கேரக்டர்களில் நடித்தார்.
நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர் ஒரு நடிகரா? இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?
நடிகை நிரோஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களில் இன்னும் நிரோஷா பிரபலமாக இருக்கிறார்.
தமிழில் முதல்முறையாக ஜெயா டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற சீரியல் தான் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுத்தது. நளினி மற்றும் நிரோஷா ஆகிய இருவரும் இந்த சீரியலில் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். இதன் பிறகு அவர் மின்னலே, சந்திரகுமாரி, ஆனந்தி, வைதேகி காத்திருந்தாள், உட்பட பல சீரியல்களில் நடித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
எம்.ஆர்.ராதாவின் வாரிசு.. 9 வயது முதல் நடிப்பு.. எம்.ஆர்.ஆர்.வாசுவின் திரைப்பயணம்.!
நடிகை ராதிகாவின் சகோதரியான நிரோஷா இன்னும் தனது வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
