எம்.ஆர்.ராதாவின் வாரிசு.. 9 வயது முதல் நடிப்பு.. எம்.ஆர்.ஆர்.வாசுவின் திரைப்பயணம்.!

நடிகர எம்ஆர் ராதாவின் வாரிசுகள் பலர் திரையுலகில் ஜொலித்திருக்கிறார்கள். அவர்களில் ராதாரவி, ராதிகா, நிரோஷா ஆகியோர் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பிரபலமான நிலையில் எம்ஆர் ராதாவின் மூத்த மகன் எம்ஆர்ஆர் வாசு எம்.ஆர்.ஆர்.வாசு அவர்களும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

நான்காம் வகுப்பு வரை படித்த அவர் சிறுவயதிலேயே தன்னுடைய தந்தை எம்ஆர் ராதாவின் நாடக சபாவில் இணைந்தார். நடிப்பு மட்டுமின்றி நாடகத்தின் டெக்னிக்கல் விஷயங்களையும் அவர் கற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி எம்ஆர் ராதாவின் ரத்த கண்ணீர் நாடகத்தில் அவர் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஏராளமான நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்ஆர்ஆர் வாசுவுக்கு முதல் முறையாக எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் தாயை காத்த தனயன். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் எம்ஆர் ராதாவுக்கு மகனாகவே எம்ஆர்ஆர் வாசு நடித்தார். இந்த படத்தில் இவர் தனது காதலியுடன் டூயட் பாடும் பாடலும் உண்டு.

நடிகர் பாக்யராஜின் காதலுக்கு உதவிய வடிவுக்கரசி! நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

தாயை காத்த தனயன் படத்திற்கு பிறகு எம்ஆர்ஆர் வாசு பல படங்களில் நடித்தார். குறிப்பாக பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான எதிர்நீச்சல், ஆயிரம் பொய், பூவா தலையா, புன்னகை ஆகிய படங்களில் நடித்தார்.

images 46

மேலும் அவர் எம்ஜிஆர் சிவாஜி உடனும் பல படங்கள் நடித்துள்ளார். சிவாஜியுடன் சொர்க்கம், பாபு, ஞான ஒளி, நீதி, பாரத விலாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். எம்ஆர்ஆர் வாசுவுக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் அது காசே தான் கடவுளடா தான். இந்த படத்தில் அவர் ரமாபிரபாவின் அப்பாவாக நடித்திருப்பார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது.

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!

இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்தஎம்ஆர்ஆர் வாசு கடைசியாக கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான குழந்தை ஏசு என்ற படத்தில் நடித்தார். இதன் பிறகு அவர் நடிக்கவில்லை.

எம்ஆர்ஆர் வாசு லலிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வாசு விக்ரம் என்ற மகன் உள்ளார். இவரும் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து உள்ளார்  இன்று வரை அவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

எம்ஆர்ஆர் வாசு 1984 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். எம்ஆர் ராதாவுக்கு பின்னர் அவருடைய பாணியை முழுமையாக ஏற்று மீண்டும் எம்ஆர் ராதாவை ரசிகர்கள் மத்தியில் தோன்ற வைத்தவர் எம்ஆர்ஆர் வாசு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...