நடிகவேள் எம்ஆர்.ராதாவுக்கு சினிமாவைப் பற்றி எந்தளவுக்கு தெளிவு இருந்ததுன்னு பார்த்தால் வியப்பாகத் தான் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம்தான் இது.
ரத்தக்கண்ணீர் படத்தில் எம்ஆர்.ராதாவோடு இணைந்து நடித்தவர் சந்திரபாபு. அந்தப் படத்திலே கதைப்படி, ஒரு காலகட்டத்தில் எம்ஆர்.ராதாவுக்கு குஷ்டரோகம் வந்து இருப்பது அவருக்குத் தெரியும். இந்த செய்தி தெரிந்த உடனே அதிர்ச்சியை அவரது முகத்தில் வெளிப்படுத்துவார். இதைத்தான் அந்தப் படத்தின் இயக்குனர் எதிர்பார்த்தார்.
இந்தக் காட்சியை சந்திரபாபு மாடியில இருக்குற மாதிரி அவங்க படமா எடுத்துக்கிட்டு இருந்தாங்க. எம்ஆர்.ராதாவுக்கு குஷ்டரோகம் வந்துருச்சின்னு தெரிஞ்ச உடனே அந்த அதிர்ச்சியை முகத்தில காட்டியதோடு நிற்காம, மேலே இருந்து கீழே குதித்தார் சந்திரபாபு. அப்படி அவர் செய்வாருன்னு யாரும் எதிர்பார்க்காததால அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அதை சரியா படம்பிடிக்கல. ‘நீங்க இப்படி தடால்னு குதிச்சிட்டீங்க. சொல்லிட்டு செஞ்சிருந்தீங்கன்னா நான் அழகா படம்பிடிச்சிருப்பேனே’ என்றார்.
‘அதனால் என்ன? ஒரு தடவைக்குப் பத்து தடவைன்னாலும் நான் குதிக்கத் தயாராக இருக்கேன். நீங்க தயாரா இருங்க’ன்னு சொல்லிவிட்டு மீண்டும் குதித்தார் சந்திரபாபு. அப்படி அவர் குதித்து நடித்தபோது எம்ஆர்.ராதா செட்டுக்குள் வந்தார். வந்த உடனே, ”தம்பி… சினிமாங்கறது இருக்குறது மாதிரியான ஆனா இல்லாத ஒரு உலகம். சினிமா ஒரு பொய்.
ஆனா அந்தப் பொய் மூலமா உண்மை சொல்றோம். அப்படிங்கறதுதான் தமாசு. சினிமா உலகத்துல எல்லாமே மாதிரி தான். சிரிக்கிற மாதிரி. அழுகுற மாதிரி. விழுகிற மாதிரி. எழுகிற மாதிரி. சாகிற மாதிரி. எல்லாத்தையும் மாதிரி தான் செய்யணும். இந்தப் படத்துல நான் குஷ்டரோகியா நடிக்கிறேன். அதுக்காக நிஜமாகவே நான் குஷ்டரோகியா ஆக முடியுமா?
கீழே விழுற மாதிரி நடிக்கணுமே தவிர, விழக்கூடாது. மீண்டும் உனக்கு அடிபட்டுட்டா உன் வாழ்க்கையை யார் பார்க்குறா? கை, கால்கள் நல்லா இருந்தா தான் சினிமாவுல தொடர்ந்து நடிக்க முடியும். உன்னுடைய ஹெல்த்ல நீதான் கவனம் செலுத்தணும்” என்று சந்திரபாபுவுக்கு அறிவுரை சொன்னார் எம்ஆர்.ராதா.
நடிகர்களைப் பொருத்தவரைக்கும் காட்சி சிறப்பாக வரணும்கறதுக்காக கொஞ்சம் ஆர்வமா நடிக்கலாம். ஆனா, அதற்கும் ஒரு எல்லை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எவ்வளவு தெளிவா எம்ஆர்.ராதா இருந்துக்காருன்னு இந்த சம்பவம் நமக்கு எடுத்துரைக்கிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



