சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி குறித்து கங்கை அமரன் சொன்ன சில விசேஷ தகவல்கள். ஜிகே.வெங்கடேஷூக்கு அதிகமான பாடல்களைப் பாடியது எஸ்.ஜானகிதான். அப்போது இளையராஜா ஜிகே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்ததால் ஜானகி பாடும்போது அவரது குரலைக் கேட்டு கேட்டு நாமும் இசை அமைக்கும்போது அவரைப் பாட வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் தான் அன்னக்கிளி படம் வந்தபோது முழுப்படத்திலும் ஜானகியைப் பாட வைத்தோம் என்கிறார் கங்கை அமரன்.
எங்க தெருவுக்கு பக்கத்து தெருவுல அவங்க இருந்ததால அடிக்கடி போய் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் அரட்டை அடிப்பதுன்னு குடும்ப உறவுகள்ல வளர்ந்தது தான். எஸ்பிபி.யையும், ஜானகியையும் இழந்தது மிகப்பெரிய இழப்பு. ஓடத்துல தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா என்ற பாட்டுக்கு நான் இசை அமைத்தேன். ஜானகி அம்மா பாடுனாங்க.
16 வயதினிலே படத்தில் நான் எழுதின முதல் பாட்டு செந்தூரப்பூவே. ஜானகி அம்மா பாடுனாங்க. நான் எழுதின முதல் பாட்டைப் பாடியவரும் அவர் தான். இளையராஜா இசையில் முதல் பாட்டைப் பாடியதும் அவர் தான் என்கிறார் கங்கை அமரன். அவ்வளவு இனிமையான குரல் அவருடையது. இப்போ பழகுபவர்கள் எல்லாம் அவரிடம் கத்துக்கணும் என்று சிலாகிக்கிறார் கங்கை அமரன்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



