படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. ராஜேந்திரன் மொட்ட ராஜேந்திரன் ஆனது இப்படி தான்..!!

By Aadhi Devan

Published:

1992 ஆம் வருடம் வெளியான திருமதி பழனிச்சாமி திரைப்படத்தில் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார் ராஜேந்திரன்.

தற்போது மொட்டை ராஜேந்திரன் என்று பிரபலமாக இருக்கும் இவர் அப்போதைய காலகட்டத்தில் திரையில் அடையாளம் காண முடியாத நபராக தான் இருந்துள்ளார்.

அதன் பிறகு பிதாமகன் திரைப்படத்தில் சிறை காவலராக நடித்திருந்தார். ஆனால் இவர் பிரபலமானது நான் கடவுள் திரைப்படத்தின் மூலமாகத்தான். அந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தன்னையே ஏளனமாய் நினைத்த காமெடி நடிகர்… அவருக்காக கை கொடுத்த அஜித்… பின்ன தலனா சும்மாவா?

சில படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தாலும் பல படங்களில் இவர் காமெடி நடிகராக தான் அறியப்படுவார். ரசிகர்கள் பலருக்கும் இவர் எப்போதும் மொட்டை அடித்துக் கொள்வாரா?

இவரது தலை இப்படி இருப்பதன் ரகசியம் என்ன? என சந்தேகம் இருந்திருக்கும். இது குறித்து மொட்டை ராஜேந்திரன் அவர்களே பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அப்போது கூறிய அவர் தனக்கு ஆரம்ப காலகட்டத்தில் கர்லிங் ஹேர் இருந்ததாக கூறியுள்ளார்.

அண்ணனை மாதிரி காமெடி நடிகரா வரணும்னு ஆசைப்பட்டு.. கனவாகவே முடிந்து போன வடிவேலுவின் சகோதரர் வாழ்க்கை..

கேரளா வயநாடு அருகே ஒரு படப்பிடிப்பிற்கு சென்றிருந்தபோது ஒரு காட்சியில் ஆர்ட்டிஸ்ட் அடித்ததும் 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் விழ வேண்டும். அப்படி மொட்டை ராஜேந்திரன் அந்த படப்பிடிப்புக்காக தண்ணீரில் விழுந்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு தான் அந்த ஊர் மக்கள் அது தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீர் என்று கூறி எதற்காக இதில் விழுந்தீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது மொட்டை ராஜேந்திரன் அடியாள் தான் என்பதால் உடனே குளிப்பதற்கு எந்த வசதியும் இல்லாமல் வீட்டிற்கு சென்று தான் குளித்துள்ளார்.

காசில்லாமல் தெருவில் பட்டினி கிடந்த காமெடி நடிகர்.. முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து உயரம் தொட்ட அசத்தல் பின்னணி..

அதன் பிறகு அவரது தலையில் சிறிய அளவில் பொடுகு போன்று ஆரம்பித்து அது தலை முழுவதிலும் பரவி முடி முழுவதுமாக கொட்ட துவங்கி தற்போது மொட்டை ராஜேந்திரன் என்ற பெயருக்கு ஏத்த மாதிரி வந்து விட்டதாக கூறியுள்ளார்.