தன்னையே ஏளனமாய் நினைத்த காமெடி நடிகர்… அவருக்காக கை கொடுத்த அஜித்… பின்ன தலனா சும்மாவா?

தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அஜித்குமார். இவர் தனது முதல் படத்தில் நடிக்கும்போது பல ஏளனங்களையும் சந்தித்தவர். இருந்தாலும் தான் முன்னேறவேண்டும் எனும் எண்ணத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்,

இவர் நடித்த வாலி, வில்லன், பில்லா போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். மேலும் சினிமா வாழ்க்கையைவிட தனது தனிப்பட்ட வாழ்க்கையிலிம் மிகுந்த கவனம் செலுத்துபவரும் கூட.

அருள்நிதி நெஞ்சுல கைய விட்டு ரத்தத்தை நோண்டி எடுக்கிறதே மிரட்டுதே!.. டிமான்டி காலனி 2 டிரெய்லர் இதோ!

இவர் பொதுவாக அனைவருக்கு உதவுபரும் கூட. ஆனால் அதற்காக எந்தவொரு விளம்பரமும் செய்து கொள்ளாதவர். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என நினைப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது உதவும் குணத்திற்கு இவரது வாழ்வில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணமும் கூட. இவருடன் வீரம் திரைப்படத்தில் நடித்தவர்தான் நடிகர் அப்புக்குட்டி.

இவர் வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வீரம் திரைப்படத்தின் படபிடிப்பின்போது எப்போதுமே தனியாகவே இருப்பாராம். அப்போது ஒரு நாள் அஜித் அவரை அழைத்து அதற்கான காரணத்தை கேட்டுள்ளார். உடனே அப்புக்குட்டி தனது தாழ்வு மனப்பான்மையான எண்ணத்தை அவரிடம் கூறியுள்ளார்.

நடிகையை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட விஜயகாந்த்?… கடைசியில் பிரேமலதாவுடன் திருமணம் நடந்தது எப்படி?..

அதனை கேட்ட அஜித் தான் முதலில் சினிமாவில் பட்ட கஷ்டங்களை எடுத்துகூறி அவருக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார். பின் தினமும் தன் அருகில்தான் அமர வேண்டும் எனவும் கூறியுள்ளார். பின் ஒரு நாள் அப்புகுட்டியை அழைத்து சென்று அவருக்கு பலவித மேக்கப்களை செய்ய சொல்லி புகைப்படமும் எடுத்துள்ளார். ஆனால் அப்போதும் கூட அப்புகுட்டிக்கு தன் மீது தைரியம் வரவில்லையாம்.

ஒரு கட்டத்தில் அஜித் கடுப்பாகிவிட்டாராம். இவ்வாறு அப்புகுட்டிக்கு மனதைரியத்தை கொடுத்துள்ளார் அஜித்குமார். ஆனால் என்னவோ தெரியவில்லை அப்புகுட்டிக்கு படவாய்ப்புகள் பெரிதளவில் அமையவில்லையாம். இதை அவரே ஒரு முறை தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.