பிரபல தொலைக்காட்சி நடிகர் மிர்ச்சி செந்திலிடம் ஆன்லைன் மோசடியாளர்கள் பணத்தை ஏமாற்றியதாக அவர் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள செந்தில் தற்போது “அண்ணா” என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது Instagram பக்கத்தில் மிர்ச்சி செந்தில் செய்த பதிவில், தனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவரின் நம்பரில் இருந்து ஒரு மெசேஜ் வந்ததாகவும், அவசர தேவை காரணமாக பணம் வேண்டும் என்று கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். உடனே, அவர் கேட்ட 15 ஆயிரம் ரூபாய் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு, அந்த நம்பரின் பெயரை பார்த்தபோது “யோகேந்தர்” என்று இருந்ததை கவனித்தார். உடனே சந்தேகம் அடைந்து, அந்த தொழிலதிபரை நேரில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இதுபோன்று எனக்கு பலரும் போன் செய்திருக்கிறார்கள். என்னுடைய வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு, அவசரமாக பணம் கேட்டும் மோசடி செய்திருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.
எனவே, யாராவது அவசரமாக பணம் கேட்டால், யோசிக்காமல் பணம் அனுப்ப வேண்டாம் என்று மிர்ச்சி செந்தில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.