முதல் படத்திலேயே தற்கொலை முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய எம்ஜிஆர்..!!

Published:

மக்கள் திலகம் எம்ஜிஆர்  கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் உயிருக்கு ஆபத்தான காட்சி ஒன்றில்  நடித்துள்ளார். அப்போது அவர் நூலிழையில் உயிர்பிழைத்ததாகவும் அன்று மட்டும் ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் இன்று நாம் ஒரு புரட்சி தலைவரை இழந்திருப்போம் என்று திரையுலகினர் கூறுவது உண்டு.

மக்கள் திலகம் எம்ஜிஆர் சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் 1936 ஆம் ஆண்டு அறிமுகமானாலும் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் ராஜகுமாரி. இந்த படத்தில் தான் கலைஞர் மு கருணாநிதி  வசனகர்த்தாவாக அறிமுகமானார்.

எம்ஜிஆர் முதல் முதலாக ஹீரோவாக நடித்த இந்த படம் கடத்த 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.  இந்த பாடத்தில் பத்து பாடல்கள் உண்டு . இந்த படத்தை ஏ.எஸ்.ஏ சாமி இயக்கியிருந்தார்.

அதிமுக தொடங்கிய 2 நாட்களில் வெளியான எம்ஜிஆர் படம்… அரசியல் பேசியதா…?

rajakumari

இந்த நிலையில் எம்ஜிஆர், நம்பியார், டி எஸ் பாலையா, எஸ் வி சுப்பையா உள்ளிட்டோர் நடித்த ராஜகுமாரி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு விபரீதம் ஏற்பட்டது. கதைப்படி கதாநாயகன் எம்ஜிஆர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வது    போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டும்.

எம்ஜிஆர் தூக்கில் தொங்கும் போது அவரது உடல் கனம் தாங்காமல் உத்திரம் உடைந்து கீழே விழ வேண்டும், அதன் பிறகு எம்.ஜி.ஆர் தற்கொலையிலிருந்து காப்பாற்றப்படுகிறார் என்பதுதான் காட்சி. இந்த காட்சியை எடுப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. எம்ஜிஆர் தூக்கில் தொங்கிய அடுத்த வினாடியை உத்திரம் உடைந்து விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

rajakumari1

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

ஆனால் எம்ஜிஆர் தூக்கு கயிறை கழுத்தில் இறுக்கியவுடன் உத்திரம் ஒரு நிமிடம் வரை உடையவில்லை. ஒரு கட்டத்தில் சுருக்கு கயிறு எம்.ஜி.ஆரின் கழுத்தை இறுக்கியது, நெஞ்சில் வலி ஏற்பட்டது, இன்னும் ஒரு சில வினாடி தாமத்திருந்தால் கூட விபரீதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நல்ல வேளையாக ஒரு நிமிடம் கழித்து உத்திரம் உடைந்தது. உடனடியாக மருத்துவரை அழைத்து  எம்ஜிஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எம்ஜிஆர் தனது முதல் படம் என்பதால் தான் சரியாக நடிக்காததால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டு விட்டதோ என்றும், தன்னை படத்திலிருந்து நீக்கி விடுவார்களோ என்றும் அஞ்சினார். ஆனால் அப்போதுதான் ஒரு கை அவரை தட்டிக் கொடுத்து உங்களுக்கு இனிமேல் ஆபத்தே இல்லை என்று ஆறுதல் கூறியது. அவர்தான் நம்பியார்

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் – நம்பியார் நட்பு தொடங்கிய நிலையில் எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை நீடித்தது.  . எம்ஜிஆர் தேர்தலில் வென்று முதலமைச்சரான பின்னரும் நம்பியார் மீது நட்பு கொண்டிருந்தார்.rajakumari2

ராஜகுமாரி படத்தின் கதை என்னவென்றால் ஒரு நாட்டில் ஒரு திமிர் பிடித்த ராஜகுமாரி இருப்பார். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்யும் வில்லனை அலட்சியப்படுத்துவார். ஒருநாள் ராஜகுமாரி வேட்டைக்கு செல்லும்போது ஒரு இளைஞனை பார்ப்பார். அந்த இளைஞன் தரும் விருந்தில் மயங்கி அவனை காதலிப்பார்.

இந்த நிலையில் ராஜகுமாரியை காதலித்த வில்லன் அவரை கடத்தி ஒரு தீவில் வைத்திருப்பார். ராஜகுமாரியின் காதலன் பல்வேறு மந்திர, தந்திர சாகசங்களுக்கு பின் ராஜகுமாரியை மீட்டு அவரை திருமணம் செய்து கொள்வார் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ராஜகுமாரியாக மாலதி என்பவர் நடித்திருந்தார்.

எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!

அவரை காதலிக்கும் காதலனாக எம்ஜிஆர் நடித்திருந்தார்.  வில்லனாக டிஎஸ் பாலையா நடித்திருந்தார். எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆகியது. இந்த படத்தை தயாரித்த ஜூபிடர் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது.

மேலும் உங்களுக்காக...