தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டையே ஆட்சி செய்த வள்ளல்தான் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு வீட்டில் செல்லமாக சின்னவர் என்ற பெயர் உண்டு. அதற்குக் காரணம் அவருடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை பெரியவர் என்று அனைவரும் அழைப்பார்கள்.
அடிப்படையில் மலையாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சக்ரபாணி குடும்பம் பின்னாளில் இலங்கைக்குக் குடியேறினர். பின்னாளில் மீண்டும் தாய் சத்யபாமா கும்பகோணத்தில் அவர்களை வளர்த்தார்.
எம்ஜிஆரின் திரை உலக வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் இவர். 1936 ஆம் ஆண்டு இரு சகோதரர்கள் சிறு வேடங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்கள். எம்ஜிஆரின் வாழ்க்கையில் கிடைத்த வெற்றிகளுக்கு அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. சிறுவயதில் இருந்து தந்தை இல்லாமல் வளர்ந்த எம்ஜிஆருக்கு இவர்தான் தந்தையாக இருந்து வந்துள்ளார்.
திரையுலகில் ஆரம்பத்தில் இருந்து நடித்தாலும் 30 படங்கள் மட்டுமே இவர் நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு அண்ணனாக, வில்லனாக, தந்தையாக என பல்வேறு கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆருடன் மட்டும் 19 படங்களில் இவர் நடித்துள்ளார்.
எம்ஜிஆரின் திரை வாழ்க்கை மட்டுமல்லாது சினிமா வாழ்க்கைக்கும் பெருந்துணையாக எம்.ஜி.சக்கரபாணி இருந்துள்ளார். எம்ஜிஆரை வைத்து அரச கட்டளை என்ற திரைப்படத்தை இயக்கியது இவர்தான். எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். அந்த திரைப்படத்தை எம்ஜிஆர் தயாரிக்க சொல்லி ஆலோசனை கொடுத்தது எம்.ஜி.சக்கரபாணி தான்.
இசையமைப்பாளரை திட்டி எழுதிய கவிஞர்… அந்தப் பாடலையும் ஹிட் ஆக்கிய மெலடி கிங்
தந்தைக்குத் தந்தையாக, சகோதரனாக, ஆசானாக பிறந்ததிலிருந்து ஒன்றாக பயணித்த அண்ணன் வயோதிகத்தால் உடல்நிலை மோசம் அடைந்ததை கேள்விப்பட்ட எம்ஜிஆர் மனைவியோடு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் கண் முன்னே அண்ணன் உயிர் பிரிந்ததைக் கண்டு எம்ஜிஆர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தன் அண்ணனின் திடீர் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத எம் ஜி ஆர் தன்னுடைய பலம் அத்தனையும் திடீரென காணாமல் போனது போல் உணர்ந்துள்ளார்.
மேலும் வாழ்க்கையில் கடுமையான வறுமையின் பிடியிலிருந்து தப்பித்து கடுமையான உழைப்பால் முன்னேறிய அனைவரையும் நினைவு கூறுவதில் எந்த தவறும் இல்லை அப்படி முன்னேறியவர்கள் ஒருவர்தான் என்று எம்.ஜி. சக்கரபாணி என்று கூறினால் அது மிகையாகாது.