எம்ஜிஆர் நடித்த முதல் திரைப்படம் சதிலீலாவதிக்கு கதை எழுதிய ஜெமினி எஸ்எஸ் வாசன் தான், அவருடைய நூறாவது படமான ஒளி விளக்கு என்ற படத்தை தயாரித்தவர். எம்ஜிஆர் பல நிறுவனங்களுக்கு திரைப்படங்கள் நடித்துக் கொடுத்தாலும் ஜெமினி நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக உருவாக்கப்பட்ட படம் தான் ஒளிவிளக்கு. இந்த படம் எம்ஜிஆரின் 100வது படமாகவும் அமைந்தது என்பது கூடுதல் சிறப்பு.
ஒளி விளக்கு திரைப்படம் கடந்த 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. எம்ஜிஆர், ஜெயலலிதா, சௌகார் ஜானகி, அசோகன், சோ, மனோகர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சாணக்யா இயக்கத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படம் உருவானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசூலை வாரி குவித்தது.
சோ ஜோடியாக ஜெயலலிதா நடித்த படம்.. ‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்? ‘வந்தாளே மகராசி’ வெற்றி பெற்ற கதை..!
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இறைவா நீ ஆணையிடு என்ற பாடல் எம்ஜிஆர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டது. சிவாஜி கணேசன் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் என யாருடைய படமாக இருந்தாலும் அந்த படம் திரையிடப்படுவதற்கு முன் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்டது. எம்ஜிஆர் பூரண நலமடைந்து திரும்ப வேண்டும் என்று திரையரங்கில் உள்ளவர்கள் எழுந்து நின்று பிரார்த்தனை செய்தார்கள்.
வழக்கமான எம்.ஜி.ஆர் பாணி கதை போல் அல்லாமல் இந்த படம் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக எம்.ஜி.ஆர் தனது படங்களில் மது புகை பிடிப்பதை அனுமதிக்க மாட்டார். ஆனால் இந்த படத்தில் அவரே மது குடித்துவிட்டு ஒரு பாடலும் பாடுவது போன்ற காட்சி அமைத்திருக்கும். மேலும் திருட்டு தொழில் செய்யும் கொள்ளைக் கூட்டத்தின் ஒரு அங்கமாகவும் எம்ஜிஆர் இருப்பார்.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போதே அப்படி ஒரு பாடல் எழுதிய வாலி! சுவாரசியமான தகவல்கள்!
அப்போதுதான் சௌகார் ஜானகியை பார்த்து அவருக்கு அடைக்கலம் கொடுப்பார். ஒரு பக்கம் ஜெயலலிதாவை காதலித்துக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தான் திடீரென எம்ஜிஆர் இருக்கும் குடிசை பகுதிக்கு வில்லன் கூட்டம் தீ வைத்து விடுவார்கள். அப்போது ஒரு குழந்தையை காப்பாற்ற போய் எம்.ஜி.ஆருக்கு காயம் ஏற்பட்டு உயிருக்காக போராடுவார். இந்த நிலையில் தான் ’இறைவா நீ ஆணையிடு’ என்று சௌகார் ஜானகி உருக்கமாக இந்த பாடலுக்கு நடித்திருப்பார். இந்த பாடலை பி சுசீலா மிக அபாரமாக பாடியிருப்பார்.
பொதுவாக பிரபல நடிகர்களின் நூறாவது படம் வெற்றி பெறாது என்று தான் சினிமாவில் சென்டிமென்ட் ஆக இருந்தது. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த் ஆகிய மூவருக்கு மட்டுமே 100வது படம் வெற்றி பெற்றது. அந்த வகையில் ஒளி விளக்கு படமும் எம்ஜிஆர் நூறாவது படமாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.
நாடக வாழ்க்கையை தொடர்ந்து எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன தெரியுமா?
இந்த படத்தில் தைரியமாக சொல் நீ மனிதன் தானா என்ற பாடல் இருக்கும். இந்த பாடலில் மொத்தம் ஐந்து எம்ஜிஆர்கள் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் தொழில் நுட்பம் முன்னேறாத நிலையில் மாஸ்க் ஷாட் என்ற முறையில் இந்த பாடல் காட்சியை உருவாக்கி ஒரே ஸ்கிரீனில் ஐந்து எம்ஜிஆர் வருவது போல் உருவாக்கி இருப்பார்கள். இதற்காக படக்குழுவினர் இரவு பகலாக உழைத்தனர். இந்த காட்சி திரையில் தோன்றும் போது ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அடங்க பல நிமிடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.