50 ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளி கதை…. எம்ஜிஆர் நடித்த “கலையரசி” என்ன சொல்கிறது…..?

By Bala Siva

Published:

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதை நாம் எல்லோரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது டெக்னாலஜி அதிகரித்துள்ள இந்த காலத்திலேயே இதை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம். ஆனால் 50 வருடங்களுக்கு முன்பே விண்வெளி குறித்த கதையம்சம் கொண்ட திரைப்படம் தமிழில் வந்திருக்கிறது. அதுதான் எம்ஜிஆர் நடித்த கலையரசி திரைப்படம். இது பலருக்கும் நம்ப முடியாத தகவலாக இருக்கும்.

எம்ஜிஆர், பானுமதி நடித்த கலையரசி என்ற திரைப்படம் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியானது. ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நம்பியார், வீரப்பா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

ஏவிஎம் நிறுவனத்திற்காக பட ரிலீஸை தள்ளி வைத்த எம்ஜிஆர்.. ஆனால் 20 நாட்களில் ரிலீஸ் செய்ததால் சிக்கல்..!

kalaiarasi2

இந்த படத்தின் கதைப்படி எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதி ஆகிய இருவரும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருவார்கள். எம்ஜிஆர் ஏழை விவசாயியாகவும், பானுமதி பணக்கார வீட்டு பெண்ணாகவும் துடுக்கான பெண்ணாகவும் இருப்பார். பல கலைகளிலும் வல்லவராக இருப்பார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலிப்பார்கள்.

இந்த நிலையில் விண்வெளியில் இருந்து பறக்கும் தட்டில் நம்பியார் தனது உதவியாளருடன் வருவார். தனது கிரகத்தில் டெக்னாலஜி அதிகரித்திருந்தாலும் கலை அம்சம் இல்லை என்பதால் அனைத்து கலைகளிலும் சிறந்த ஒருவரை பூமியிலிருந்து கடத்திக் கொண்டு சென்று தனது கிரகத்தில் கலை ஆர்வத்தை வளர்க்க வைக்க வேண்டும் என்பதுதான் எம் என் நம்பியாரின் பணியாக இருந்தது.

அவர் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கும் பானுமதியை கடத்தி செல்வார். அவர் பின்னாலே செல்லும் எம்ஜிஆர், விண்வெளிக்கு சென்று நம்பியாரின் கிரகத்திலிருந்து தனது காதலி பானுமதியை எப்படி மீட்டு கொண்டு வந்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

kalaiarasi1

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் இதுதான். 50 ஆண்டுகளுக்கு முன்பு டெக்னாலஜி அதிகரிக்காத காலத்திலேயே பல ஆச்சரியமான காட்சிகள் இந்த படத்தில் இருக்கும். அதுமட்டுமின்றி விண்ணுலகம் செல்லும் எம்ஜிஆர் அங்கு தன்னை போலவே இருக்கும் ஒருவரை பார்ப்பார். ஒருவர் போலவே ஏழு பேர்கள் இருப்பார்கள் என்று கூறப்படும் அம்சத்தில் இருந்து தான் இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்வெளியில் இருக்கும் எம்ஜிஆர் கோமாளித்தனமாக செயல்படுவதுபோல் இருப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எம்ஜிஆர் அறிமுகமான படத்தில் அறிமுகம்.. 1000 படங்களுக்கும் மேல் நடித்த தங்கவேலுவின் கதை..!

இருப்பினும் அந்த காலத்திலேயே ஒரு வித்தியாசமான படமாக, பறக்கும் தட்டு, விண்வெளி ஆகிய கதையம்சம் கொண்ட படம் வெளிவந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்று கூட இந்த படத்தை பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்.

kalaiarasi

இயக்குனர் ஏ.காசிலிங்கம் இந்த படத்தை இயக்குவதற்கு முன்னர் பல ஆய்வுகள் செய்தார். விண்வெளி குறித்த பல புத்தகங்களை படித்தார். ஹாலிவுட்டில் வெளியான விண்வெளி படங்களை பார்த்தார். இந்த படத்தின் கதையின் நோக்கம் சூப்பராக இருந்தது என்றாலும் திரைக்கதை சொதப்பியதால் தான் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

இந்த படத்தில் இடம்பெற்ற 9 பாடல்களும் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. பின்னணி இசையையும் கே.வி.மகாதேவன் சூப்பராக அமைத்து இருப்பார். இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்று பெயர் பெற்றுள்ளது.