மீனாளின் அட்டகாசங்கள்… வேலுவின் குறும்புத்தனங்கள்… கலகலப்பான சக்திவேல் தொடரின் இன்றைய எபிசோட்…

By Meena

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஜோதி சக்தியை இந்த வீட்டு வழக்கப்படி மாறிக்கொள் என்று திட்டுகிறாள். மீனாள் தனது அப்பா சிக்கல் சிவபதிக்கு போன் செய்து தனது புகுந்த வீட்டில் கறி செஞ்சு தரமாட்டேங்கிறாங்க, நம்ம வீட்டில் என்னிக்காவது கறி சாப்பிடாமல் இருந்திருக்கோமா, எனக்கு பசிக்குது அப்பா, நண்டு கறி சாப்பிடணும் போல் இருக்கு என்று கூறுகிறாள். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று இனி காணலாம். இன்றைய எபிசோட் கலகலப்பான ஒன்றாக தான் இருக்கிறது. மீனாளுக்காக சிக்கல் சிவபதி கேரியரில் விதவிதமான அசைவ சாப்பாடைக் கொண்டு வருகிறார். நண்டு, மட்டன், சிக்கன் லெக் பீஸ், பிஷ் பிரை, காடை, முட்டை என அனைத்தையும் கண்டு அனந்தமடைந்த மீனாள் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

மெய்யநாதன் குடும்பத்திடம் சிக்கல் சிவபதி என்ன வாத்தியாரே என் பொண்ண இப்படி சாப்பாட்டுக்கு கையேந்த விட்டுடீங்களே என்று கேட்கிறார். பழைய சிக்கல் சிவபதியா இருந்தா இந்நேரம் என்ன நடக்கும்னு தெரியாது. ஆனால் இப்போ என்னால் அப்படி உங்களிடம் பேச முடியவில்லை. ஏனென்றால் எங்கள் வீட்டுக்கு வாரிசு வரப்போகுது, என் மருமகள் தேனம்மை முழுகாம இருக்கா. அதுவும் அந்த விஷயம் உங்க பொன்னாலதா தெரிய வந்துச்சு அதனால நான் சந்தோஷம் ஆகிட்டேன். இதே மாதிரி உங்க பொண்ணு நல்லபடியா நடந்தா எந்த பிரச்னையும் வராது என்று கூறுகிறார்.

மேலும் என் பொண்ணு மீனாளை நான் செல்லமா வளத்துட்டேன். அதனால அவ இப்படி இருக்கா, உங்க பொண்ணுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பீங்களோ அது மாதிரி தட்டி கொடுத்து கண்டிச்சு வையுங்க. அவ மனசுல வச்சுக்காம பட பட்டுனு பேசுவா, ஆனா நீங்க சொன்னதை ஒருநாள் செய்யலானாலும் மறுநாள் மனசு கேக்காம செஞ்சுடுவா என்று சொல்கிறார். பின்னர் மீனாளிடம் என்னமா நல்லா சாப்பிட்டியா இனி எது வேணும்னாலும் அப்பாக்கு போன் போடு எல்லாத்தையும் இங்க இறக்கிடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபுறம் சக்தி தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அங்கு வேலன் வந்து சக்தியை குறும்பாக வம்பிழுக்கிறான். உதவி செய்கிறேன் என்று சொல்கிறான். நீ எதுவும் செய்யாமல் இருப்பதே பெரிய உதவி அப்டினு சக்தி சொல்கிறாள். பின்னர் வேலு சக்தியை ஒரு மாமரத்திடம் அழைத்துச் செல்கிறான். அங்கு இந்த மரம் எனக்கு நண்பனு சொல்லி கைதட்டுகிறான், உடனே மாங்காய் அவன் கைகளில் வந்து விழுகிறது. சக்தி அதைப் பார்த்து விட்டு உனக்கு ஒன்னு தெரியுமா இந்த மரம் எனக்கும் நண்பன்தான் என்று கூறி கைதட்டுகிறாள், அவளது கையிலும் மாங்காய் விழுகிறது. இப்போ என்ன சொல்ற அப்டினு சொன்னதும் மரத்திலிருந்து ஒருவன் அண்ணா இன்னும் இரண்டு மாங்காய் தான் இருக்கு அப்டினு சொல்லி இறங்கி ஓடிவிடுகிறான்.

சக்தி ஏன் இப்டி பண்ற அப்டினு கேட்கிறாள். அதற்கு வேலன் அம்மா திட்டினதுனால நீ சோகமா இருந்த உன்ன சிரிக்க வைக்க தான் இப்படி பண்ணினேன், இப்போ பாத்தியா நீ சிரிச்சிட்டே அப்டினு கூறி மாங்காயை கொடுத்து விட்டு சென்றுவிடுகிறான். சக்தி கையில் மாங்காய் இருப்பதைப் பார்த்த தேனு உப்பு காரப்பொடி எடுத்துக் கொண்டு வருகிறாள். சக்தியும் தேனுவும் மாங்காயை வெட்டி சாப்பிடுகின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

மேலும் உங்களுக்காக...