மாஸ்டர் பட ட்ரைலர் மாஸாக இருக்கும்… மாளவிகா மோகனன் பேட்டி!!

By Staff

Published:

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் படமாகும். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தத் திரைப்படமானது திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தநிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 26 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது கொரோனோ தீவிரமாக தலைவிரித்தாடும் நிலையில் ஜூலை மாதம் வரை திரையரங்குகள் திறக்கப்படாது என்று கூறப்படுகின்றது.

db2297a337c56011d9ad723c20fffde0

இந்தநிலையில் மாஸ்டர் பட அப்டேட் குறித்து அப்படத்தின் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தைய பேட்டி ஒன்றில் கூறி, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதாவது அவர் மாஸ்டர் ட்ரைலர் குறித்துக் கூறியதாவது, “இசை வெளியிட்டு விழா முடிந்த பின்னர் அடுத்த நாளில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் ஆபீசில் மாஸ்டர் ட்ரைலரை பார்த்தேன். உண்மையில் அதைப் பார்த்ததும் உடம்பெல்லாம் சிலிர்த்துடுச்சு. நிச்சயம் நீங்களும் அதுபோன்ற உணர்வினைப் பெறுவீர்கள்” என்று கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்களோ, படத்தை பொறுமையாக்கூட ரிலிஸ் பண்ணுங்க, அட்லீஸ்ட் அந்த ட்ரைலரையாச்சும் போடுங்களேன் என்று கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர்.

Leave a Comment