தனுஷின் கர்ணன் பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்!

Published:

இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பரியேறும் பெருமாள் என்கிற படத்தின் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் மாரி செல்வராஜ்.

தனுஷ் நடிப்பில் அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கர்ணன். படத்தை தலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். படம் வெளியாகி ஆண்டுகள் ஆனாலும் மக்களின்மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

ஒதுக்கப்பட்ட சமூகத்தின் முக்கிய பிரச்சனையை பேசும் இப்படத்திற்கு நல்ல விமர்சனம் வந்ததை அடுத்து வசூலிலும் கலக்கிறது. படம் வெளியான 10 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.41 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து வந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் முன்னணி பிரபல இயக்குனராக அடையாளம் காணப்பட்டார், இதுவரை மூன்று படங்களை மட்டுமே இயக்கிய இவரின் அடுத்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாரி செல்வராஜின் நான்காவது படம் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.வாழை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவியும் இணைத்து தயாரிக்கஉள்ளனர் .

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கயுள்ளார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 21) துவங்கியது.

வைரலாகும் அஜித் மற்றும் ஷாலினியின் சமீபத்திய புகைப்படம்! கோலிவுட்டின் ‘சிறந்த ஜோடி’ பட்டம் வேற ..

முன்னணி நடிகர் உதயநிதி படத்தி பூஜையை துவக்கி வைத்தார். 1994ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தான் படம் உருவாவதாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் நான்கு சிறுவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கயுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...