ஓடி ஒளிந்த சர்ச்சை நாயகன் மன்சூர் : தேடுதல் வேட்டையில் களமிறங்கிய காவல் துறை

Published:

எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி சமூக வலைதளங்களை டிரெண்டிலேயே வைத்திருக்கும் மன்சூர் அலிகான் அண்மையில் இவர் நடிகை திரிஷாவுக்கு எதிராக சில கருத்துக்களைக் கூற மீண்டும் சோஷியல் மீடியாக்களுக்கு தீனி போட ஆரம்பித்தார்.

மன்சூர் நடித்த சரக்கு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய போது, அதாவது “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டது போல் திரிஷாவை போட முடியவில்லை” என பொருள்படும்படி அவர் கூறியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.

இதற்கு நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், குஷ்பு, பாரதிராஜா, நடிகர் சங்கம் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி நடிகை த்ரிஷா, “மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” என தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த சர்ச்சையை விடாத மன்சூர் அடுத்தடுத்து ஒவ்வொருவரின் மேலும் குற்றம் சுமத்த ஆரம்பித்தார். நடிகர் சங்கத்துக்கு வாபஸ் பெறக் கோரி கெடுவெல்லாம் விதித்தார்.

“என்னை பெட்ரூமுக்கு வர சொல்லி”.. பளார்ன்னு கன்னத்துலயே அறை.. விசித்ரா கைகாட்டிய தெலுங்கு ஹீரோ யார்?

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய குழுவில் இருக்கும் குஷ்பூ இந்த விவகாரத்தை சும்மா விட மாட்டேன் என்று கூறிய நிலையில் மன்சூர் அலிகானுக்கு எதிராக இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இன்று காவல் நிலையத்தில் ஆஜராகக் கோரி உத்தரவு பிறப்பித்த நிலையில், மன்சூர் அலிகாக் ஆஜராகவில்லை. மேலும் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை எனவும், காவல்துறையினர் அவரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் உங்களுக்காக...