வெற்றிலையில் மை போட்டு பார்த்த சாமியார்.. மனோஜ்-ரோகிணி பணத்துக்கு பெப்பே..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில், கார் ஓட்டப் பழக வந்த சிந்தாமணிக்கும் முத்து மற்றும் மீனாவுக்கும் இடையே உரையாடல்கள் நடக்கின்றன.”உங்களுக்கும், மீனாவுக்கும் தான் தொழிலில் போட்டி. எனக்கும்…

sa2 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில், கார் ஓட்டப் பழக வந்த சிந்தாமணிக்கும் முத்து மற்றும் மீனாவுக்கும் இடையே உரையாடல்கள் நடக்கின்றன.”உங்களுக்கும், மீனாவுக்கும் தான் தொழிலில் போட்டி. எனக்கும் உங்களுக்கும் எந்த போட்டியும் இல்லை. நீங்கள் விரும்பினால், நானே உங்களுக்கு கார் ஓட்டக் கற்றுத் தருகிறேன்,” என்று முத்து கூறுகிறார்.

மேலும் “ஏனென்றால் என் பொண்டாட்டியிடம் எப்படியும் நீங்கள் தோற்று விட்டு ஓட போகிறீர்கள்? அப்போது உங்களுக்கு கைவசம் ஒரு தொழில் வேண்டும்,” என்று முத்து கிண்டலாக சொல்கிறார்.

அதற்கு, “யார் யாரை தொழிலை விட்டு துரத்துகிறார்கள் என்று பார்க்கலாம்!” என்று கூறிவிட்டு, ஆத்திரத்துடன் சிந்தாமணி வெளியில் கிளம்புகிறார்.

இதனை அடுத்து, ரோகிணி மற்றும் அவருடைய தோழி வித்யா இருவரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட வருகின்றனர். அப்போது, “முத்து தனது கணவரை கொலை செய்ய கத்தியுடன் வந்தது” குறித்து ரோகிணி கூற, விதியா அதிர்ச்சியுடன் கேட்கிறார்.

அதற்கு ரோகிணி, “எப்படியாவது இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. அந்த 30 லட்சத்தை ஏமாறாமல் இருந்தால், ஒரு வீடு வாங்கி இருக்கலாம்,” என்று சொல்கிறாள்.

அதற்கு வித்யா கிண்டலாக, “ஒரு குடும்பத்தையே ஏமாத்திய உன்னையே ஒருவன் ஏமாற்றியிருக்கிறான் என்றால், அவன் உண்மையில் திறமையானவர்!” என்று கூறுகிறாள்.

அப்போது தான், ரோகிணியிடம் பணத்தை ஏமாற்றிய கதிர் அதே ஹோட்டலுக்கு வருகிறார். அவரை பிடிக்க ரோகிணி முயற்சிக்க, ஆனால் அந்த நபர் தப்பித்து ஓடிவிடுகிறார்.

இதனை அடுத்து, ரோகிணி வீட்டிற்கு வந்து மனோஜிடம் நடந்ததை கூறுகிறார். “எப்படியாவது பிடித்திருக்கலாமே! என்று மனோஜ் கேட்க, முடியவில்லை. அவன் பார்க்கத்தான் வயதானவன், ஆனால் வேகமாக ஓடுகிறான்!” என்று ரோகிணி சொல்கிறாள்.

இதனால், இருவரும் “நாமே தான் அவனை தேட வேண்டும், போலீசை நம்பி எந்த பயனும் இல்லை” என்று முடிவு செய்கிறார்கள். பார்வதி ஆன்ட்டியிடம் சொல்லி, யாராவது சாமியார் உதவியை நாடலாம் என்று மனோஜ் கூற, பார்வதி ஒரு சாமியாரை கூட்டி வருகிறார்.

அந்த சாமியார் வெற்றிலையில் மை போட்டு, “யாராக இருந்தாலும் கண்டுபிடித்து விடுவேன்,” என்று கூறுகிறார். அதற்கு முத்து கிண்டலாக, “வெற்றிலையில் மை போட்டால் வெற்றிலை தானே கருப்பாகும்!” என்று கிண்டல் செய்கிறார். இதனால், மனோஜ் அவர்களை கண்டிக்கிறார். ரோகிணி, “இந்த விஷயத்தில் முத்து, உங்களுடைய உதவி எங்களுக்கு தேவையில்லை!” என்று கூறுகிறார்.

அடுத்து, அந்த சாமியார் “3000 ரூபாய் காணிக்கை வையுங்கள்” என்று கூற, மனோஜ் 3000 ரூபாய் வைக்கிறார். அதன் பிறகு, வெற்றிலையில் மை போட்டு, “உங்கள் பணத்தை அவன் செலவழித்து விட்டான் போல் தெரிகிறது. வெற்றிலையில் பணமே தெரியவில்லை!” என்று கூறுகிறார்.

இதனை அடுத்து, முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோர் மீண்டும் கிண்டல் செய்கிறார்கள்.

கோபமாகிய சாமியார், “இவர்கள் எல்லாம் எங்களை கிண்டல் செய்கிறார்கள்!” என்று கூற, இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைய எபிசோட்டில் பிரெளன்மணி, அண்ணாமலை குடும்பத்திடம் சிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.