அந்த விஷயத்தில் மணிரத்தினம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்!.. வெளிப்படையாய் சொன்ன மனோஜ் பாரதிராஜா!..

By Sathish

Published:

மணிரத்தினம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மட்டுமின்றி தவிர்க்க முடியாத இயக்குனராகவும் வலம் வருகிறார். அதற்கு மிகப்பெரிய காரணமாக விளங்குவது சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். எம்.ஜி.ஆர்,சிவாஜி ,ரஜினி, கமல் என பல முன்னணி ஹீரோக்கள் பலரும் எடுக்க நினைத்தனர். ஆனால் பல தடங்கல்கள் காரணமாக படத்தை எடுக்க முடியாமல் போனது.

கைவிடப்பட்ட படத்தை நீண்ட காலத்துக்கு பிறகு கார்த்தி, விக்ரம் ஜெயம் ரவி ,மற்றும் பார்த்திபன் ,சரத்குமார், பிரபு ,விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யாராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த சரித்திரத்தை மாற்றி அமைத்து தன் முத்திரையை பதித்தார் மணிரத்தினம். அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ”தக் லைஃப்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாயகன் திரைப்படத்தை அடுத்து மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் கிளம்பியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் அந்த விஷயத்தில் இவரை யாராலும் மாற்றவும் முடியாது சமாதானப் படுத்தவும் முடியாது. என்று இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

”மணி சார் எனக்கு கடவுள் மாதிரி என்றும் அவரைப் பார்த்தால் இன்றும் எனது கை கால்கள் நடுங்கும். நான் அவரிடம் பணியாற்றிய நாட்களை என்றும் மறக்க மாட்டேன் அது எனக்கு சிறந்த அனுபவங்களை கற்றுக் கொடுத்தது எனவும் கூறியுள்ளார். ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவரிடம் ஒரு பழக்கம் உள்ளது. அது என்னவென்றால் திரைப்படமாக்க படும்பொழுது குறிப்பிட்ட காட்சியமைப்பு அவரை திருப்தியாக்கினால் மட்டுமே ஷார்ட் ஓகே சொல்வார்.

இல்லையெனில் அவர் நினைத்தது வரும் வரை சலிக்காமல் எடுத்துக் கொண்டே இருப்பார். அந்த காலகட்டத்தில் தற்போது இருக்கும் டிஜிட்டல் முறை அல்ல பிலிம் ரில்தான். எவ்வளவு ரீல் தீர்ந்து போனாலும் மறுபடியும் மறுபடியும் சலிக்காமல் அவர் நினைத்தது வரும் வரை எடுத்துக் கொண்டே இருப்பார். எங்க அப்பா பாரதிராஜா எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார். ஆனால் மணிரத்தினம் எனக்கு இதுதாண்டா சினிமா என்பதைக் கற்றுக் கொடுத்தார்”. என்று பேட்டி ஒன்றில் தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மனோஜ்.

மேலும் உங்களுக்காக...