40 வருடங்களுக்கு முன்பே திகில் படம் எடுத்த மணிவண்ணன்.. 200 நாள் ஓடிய வெற்றிப்படம்..!

Published:

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக மணிவண்ணன் இருந்தபோதுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற திகில் படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் மணிவண்ணன் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில் அந்த அனுபவத்தை வைத்து அவர் இயக்குனரான பின்னர் எடுத்த திகில் படம்தான் ‘நூறாவது நாள்’.

ஏற்கனவே ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘இளமை காலங்கள்’ உள்பட ஐந்து படங்கள் மணிவண்ணன் இயக்கிய நிலையில் அவரது ஆறாவது திரைப்படம்தான் ‘நூறாவது நாள்’. இந்த படம் முற்றிலும் அவரது முந்தைய படங்களிலிருந்து வித்தியாசமாகவும் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய திகில் படமாகவும் இருந்தது.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

கடந்த 1984ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான ‘நூறாவது நாள்’ படத்தில் விஜயகாந்த், மோகன், நளினி, ஜனகராஜ், சத்யராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். திருப்பதி சாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இளையராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

nooravadhu naal

இந்த படத்தின் நாயகி நளினி என்ன கனவு காண்கிறாரோ, அது நிஜமாவே நடக்கும் என்பதுதான் கதை. முதலாவதாக அவர் தனது சகோதரி கொலை செய்யப்படுவதாக கனவு காண்பார். அதேபோல் மறுநாளே அவரது சகோதரி கொலை செய்யப்படுவார். அதேபோல் ஒவ்வொருவராக கொலை செய்யப்படும் நிலையில் ஒருநாள் தன்னையே அந்த மர்ம மனிதன் கொலை செய்வதுபோல் கனவு காண்பார். இதனை அடுத்து அவர் அந்த மர்ம மனிதனிடம் இருந்து தப்பினாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதுதான் இந்த படத்தின் கிளைமேக்ஸ்.

இந்த படத்தில் சத்யராஜ் கொலைகாரராக நடித்திருப்பார். மிகவும் ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் இருந்த அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் ஒரு மனோதத்துவ டாக்டராக வருவார். மோகன் தான் இந்த படத்தின் ஹீரோ. ஆனால் அவ்வப்போது நளினியுடன் டூயட் பாடுவது மட்டுமே அவரது வேலையாக இருந்தது. நளினி கேரக்டர்தான் இந்த படத்தின் முதுகெலும்பு. அவரும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.

ஒரே தீபாவளிக்கு வந்த 2 விஜயகாந்த் படங்கள்.. இரண்டுமே தோல்வி..!

nooravadhu naal2

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவின் பின்னணி இசை ஒரு காரணம். இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘மூடுபனி’ உள்பட ஒரு சில திகில் படங்களுக்கு அவர் இசை அமைத்த அனுபவம் இருந்ததால் இந்த படத்துக்கு சூப்பராக இசை அமைத்தார். அவரது பின்னணி இசை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படம் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது.

எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்: 100வது பட பரிதாபங்கள்!

பாரதிராஜாவை பின்பற்றி திகில் படம் எடுத்த மணிவண்ணன் இந்த படத்தின் வெற்றி காரணமாக அதே ஆண்டு ‘24 மணி நேரம்’ என்ற திகில் படத்தை எடுத்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த படத்திலும் மோகன், நளினி, சத்யராஜ் ஆகிய மூவருமே நடித்திருந்தார்கள். அதன் பிறகு மணிவண்ணன் திகில் படங்கள் எடுக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு படங்கள் இன்றளவும் பேசப்படும் படமாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...