மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிய நதியா.. சூப்பர்ஹிட் ஆனதால் பின்னர் வருத்தம்..!

Published:

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முடியாது என்ற நதியா கூறியதாகவும், அந்த படம் பின்னர் சூப்பர் ஹிட் ஆனதால் அந்த படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று அவர் வருந்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் என்பது தெரிந்ததே. அவர் ‘பல்லவி அனுபல்லவி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தமிழில் ‘பகல் நிலவு’, ‘இதயகோயில்’ ஆகிய படங்களை இயக்கினார். இதற்கிடையில் அவர் மலையாள படம் ஒன்றையும் இயக்கினார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஐந்தாவது படம்தான் ‘மௌனராகம்’. இந்த படத்திற்காக அவர் கதை தயார் செய்து நட்சத்திரங்களை தேர்வு செய்து கொண்டிருந்தபோது நாயகன் மோகன் என்பது முடிவானது. இன்னொரு முக்கிய கேரக்டரில் கார்த்திக் ஒப்பந்தமானார்.

mouna ragam

அதன் பிறகு இந்த படத்தின் முக்கிய கேரக்டரான நாயகி கேரக்டருக்கு பிரபல நடிகை ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மணிரத்னம் உறுதியாக இருந்தார். இந்த கடினமான கேரக்டரை புதுமுக நடிகை செய்ய முடியாது என்றும் அனுபவம் உள்ள ஒரு நடிகை வேண்டும் என்றும் அவர் தனது உதவியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போதுதான் மௌனராகம் படத்தின் நாயகியாக நடிக்க நதியாவிடம் அணுகப்பட்டது. நதியா இந்த படத்தின் கதையை கேட்டு கதை ஓகே என்று சொன்னாலும் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். ஏற்கனவே தான் சில படங்களில் நடித்து வருவதாகவும் நீங்கள் கேட்கும் தேதிகள் தன்னிடம் இல்லை என்றும் தன்னிடம் இருக்கும் தேதியில் வைத்து இந்த படத்தை இயக்க முடியும் என்றால் தாராளமாக நடிக்கிறேன் என்று கூறினார். ஆனால் மணிரத்னம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இதனை அடுத்து தான் அவர் ரேவதியை கமிட் செய்ததாகவும் கூறப்படுகிறது.

mouna ragam1

இந்த படத்தின் கதை என்னவென்றால் திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்று இருந்த ரேவதியை கட்டாயப்படுத்தி மோகனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இதனால் ஆரம்பத்தில் இருந்தே கணவனை வெறுத்துவருவார் ரேவதி.

இந்த நிலையில் ஒருநாள் மோகன் ஏன் தன்னை பிடிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர் ஏற்கனவே கார்த்திக்கை காதலித்ததாகவும் ஆனால் கார்த்திக் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாகவும் இந்த காதல் தோல்வியால் தனக்கு திருமணமே வேண்டாம் என்று இருந்ததாகவும் கூறுவார்.

இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

இந்த நிலையில்தான் திடீரென தனக்கு விவாகரத்து வேண்டும் என்று ரேவதி, மோகனிடம் கேட்பார். இதனால் மோகன் அதிர்ச்சி அடைந்த நிலையில்தான் கொஞ்சம் கொஞ்சமாக ரேவதியின் மனம் எப்படி மாறுகிறது என்பதை அழுத்தமான காட்சிகள் மற்றும் திரைக்கதை, வசனத்தால் மணிரத்னம் கூறி இருப்பார். ஒரு கட்டத்தில் விவாகரத்து கிடைத்துவிட விவாகரத்து வேண்டாம் என்று கூறிவிட்டு மோகனுடன் இணைவதுதான் இந்த படத்தின் சுபமான முடிவு.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான இயக்குனர் கிடைத்துவிட்டார் என்றும் ஊடகங்கள் கொண்டாட்டின. இந்த படம் தான் மணிரத்னத்தை ஒரு மிகச்சிறந்த இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது.

mouna ragam3

இந்த படம் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இசைஞானி இளையராஜா என்று கூறலாம். ‘நிலாவே வா’, ‘சின்ன சின்ன வண்ணக்குயில்’, ‘பனி விழும் இரவு’, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘ஓ மேகம் வந்ததோ’ ஆகிய ஐந்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் 175 நாட்கள் இந்த படம் ஓடியது. இந்த படம் நகரத்தில் மட்டுமின்றி பட்டிதொட்டி எங்கும் சக்கைப் போடு போட்டது.

இளையராஜாவுக்கு போட்டியாக வந்த 2 இசையமைப்பாளர்கள்.. இருவருமே ஆஸ்கர் பெற்ற அதிசயம்..!

இந்த படத்தின் வெற்றியை பார்த்துதான் ஒரு முக்கிய படத்தை மிஸ் செய்துவிட்டோமே என்று நதியா வருந்தியதாகவும் கூறப்பட்டது. மொத்தத்தில் மணிரத்னம் தன்னை யார் என முதன் முதலில் நிரூபித்தது இந்த படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...