எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிப்பு அரக்கன் பட்டம் வழங்கிய மாநாடு.. இந்தக் கதாபாத்திரத்துல நடிக்க இருந்தது இத்தனை நடிகர்களா?

By John A

Published:

இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி குஷி, வாலி என்ற இரண்டு சூப்பர் டூப்பர் படங்களை இயக்கிய பின் பின் தானே நடித்து, இயக்க ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவில் எப்படியாவது நடிகனாக வேண்டும் என்று வாய்ப்புத் தேடியவருக்கு அமைந்தது இயக்குநர் பணி.

ஆனால் ஒரு சில படங்களை இயக்கியபின் நடிப்பிலேயே முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஹீரோவாக நடித்த நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி போன்ற படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றன. இதில் நியூ படம் சூப்பர் ஹிட் ஆனது. இருப்பினும் எஸ்.ஜே.சூர்யாவின் மேல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி நடிப்பவர் என்ற முத்திரை விழுந்தது.

இதனால் அந்த இமேஜிலிருந்து வருவதற்காகவே வேறு நல்ல கதைக்களங்களைத் தேடி நடிக்க ஆரம்பித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படம் இவருடைய இமேஜை மாற்றியது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் சைக்கோவாக நடிப்பில் வெளுத்து வாங்க, எஸ்.ஜே.சூர்யாவுக்கு சுக்ர திசை அடித்தது. நல்ல நல்ல கதாபாத்திரங்கள் தேடி வர ஆரம்பித்தது. இப்படி இவர் நடிப்பில் வந்து மாபெரும் ஹிட்டான படம் தான் மாநாடு. சிம்புவுக்கும் இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது.

தளபதி விஜய்யுடன் ஒரே படத்துடன் நிறுத்திய அஜீத்.. இந்த நல்ல மனசுதான் காரணமா?

மாநாடு திரைப்படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக முதலில் தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படும் ரவி தேஜாவை அணுகியிருக்கின்றனர். ஆனால் அப்போது அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதனையடுத்து பசுபதியை அணுக அவருக்கும் தேதி பிரச்சினை. அதன்பின் அர்ஜுனை அணுக அவர் இந்து முஸ்லீம் கதை என்பதால் சற்று யோசித்து நிராகரித்திருக்கிறார்.

மேலும் சுதீப்பை அணுகியிருக்கின்றனர். அவருக்கும் கால்ஷீட் பிரச்சினை. கடைசியாக அர்விந்த் சாமியிடம் கேட்க அவரும் அப்போது தலைவி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இப்படி பல முன்னனி ஹீரோக்கள் தட்டிக் கழித்து, நழுவ விட்ட வாய்ப்பானது எஸ்.ஜே.சூர்யாவுக்கு இறுதியில் மனுஷன் நடிப்பு அரக்கனாக மாறி மாநாடு படத்தில் தனது நடிப்பால் துவம்சம் செய்திருப்பார். வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு என்ற வசனத்தை அவரைத் தவிர அந்த மாடுலேஷனில் வேறு யாராலும் உச்சரித்திருந்தாலும் அவ்வளவு சிறப்பாக வந்திருக்காது.

இப்படி எஸ்.ஜே.சூர்யாவை நடிப்பு அரக்கனாக மாற்றிய பங்கு மாநாடு படத்திற்கு உண்டு. அதன்பின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் அல்வா சாப்பிடுவது போல் தனது நடிப்பால் படத்தின் வெற்றிக்கு மாபெரும் பங்காற்றியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.