தளபதி விஜய்யுடன் ஒரே படத்துடன் நிறுத்திய அஜீத்.. இந்த நல்ல மனசுதான் காரணமா?

தமிழில் மல்டி ஸ்டார் படங்கள் என்பது ஆரம்ப காலகட்டத்திலிருந்தே இருக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கூண்டுக்கிளி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு அடுத்த தலைமுறையான ரஜினி, கமல் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும், அலாவுதினும் அற்புத விளக்கும், தில்லுமுல்லு, உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளனர்.

அதன்பின் இருவரும் பெரிய ஸ்டார்களாகி விட்டதால் பரஸ்பரம் பேசி தனித்தனியே நடிப்பது என முடிவு செய்தனர். அதன்பின் வந்த ஸ்டார் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜீத் ஆகியோர் ராஜாவின் பார்வையிலே படத்தில் மட்டும் இணைந்தனர். அதன்பின் அவர்கள் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

அதேபோல் சூர்யா, விக்ரம் ஆகியோர் பிதாமகன் படத்தில் ஒன்றாக இணைந்தனர். இப்படி தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோக்கள் இணைந்து நடித்திருந்தாலும், ரஜினி கமலுக்குப் பின் இவ்வாறான கூட்டணிப் படங்கள் வெளிவருவது குறைந்தது. ஆனால் தற்போது அது பொன்னியின் செல்வன், செக்கச் சிவந்த வானம் என போன்ற படங்களின் மூலம் மீண்டும் டிரெண்ட் ஆகியிருக்கிறது. ஆனால் அஜீத் விஜய் ஒரே படத்துடன் நிறுத்திக் கொண்டனர்.

வாட்டி வதைத்த குளிர்.. சூரி மேல் பட்ட நெருப்பு.. பதறிய பிரபு.. அடுத்த நொடி செஞ்ச சம்பவம்

இதுகுறித்து அஜீத்தின் பழைய பேட்டி ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் ஏன் நீங்கள் இருவரும் (விஜய், அஜீத்) அடுத்து இணைந்து நடிக்கவில்லை என்ற கேள்வி எழ, அதற்கு அஜீத், “நான் ஒரு படத்தில் நடிக்கும் போது கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

அதேபோல் விஜய் நடிக்கும் போதும் 1500 குடும்பங்களுக்கு வேலை கிடைக்கிறது. இப்படி தனித்தனியே நாங்கள் நடிப்பதால் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பினைப் பெறுகின்றன. ஆனால் இருவரும் ஒன்றாக நடித்தால் அது 1500 குடும்பங்களுடனே நின்று விடுகிறது. பலருக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்படுகிறது.
இதனால்தான் நான் அவ்வாறு நடிப்பதை விரும்பவில்லை” என பதில் அளித்திருக்கிறார்.

20 வருடங்களுக்கு முன்னரே அஜீத்தின் இந்த தொலைநோக்குப் பார்வைதான் அவரை இன்றும் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா உலகத்திலும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...