பாஸ் ஆனாரா?.. ஃபெயிலானாரா PT சார்?.. ஹிப் ஹாப் ஆதி படம் 3 நாள் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?..

By Sarath

Published:

எம்எஸ் விஸ்வநாதன் படங்களில் குணச்சித்திர இடங்களில் நடித்துள்ளார். அஜித் நடித்த காதல் மன்னன், கமல்ஹாசன் நடித்த காதலா காதலா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. பாடல் காட்சிகளில் சிலர் தோன்றியுள்ளனர்.

பிடி சார் 3 நாள் வசூல்:

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த நிலையில், அவரைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர்கள் வரிசையில் ஹிப்ஹாப் ஆதியும் சுமார் ஏழு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மீசைய முறுக்கு படத்தில் நடிக்க ஆரம்பித்த ஹிப்ஹாப் ஆதி நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு, வீரன் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது பிடி சார் படத்தில் நடித்துள்ளார். பாடலாசிரியர் பா விஜய் ஹீரோவாக நடிக்கும் போது இசையமைப்பாளர்கள் இருவராக நடிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

ஆரம்பத்தில் சில வெற்றி படங்களை கொடுத்த அவர்கள், அதைத் தக்க வைத்துள்ளார்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் திரைப்படம் சுமார் 10 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹிட்டா? ஃபிளாப்பா?:

முதல் நாளில் வெறும் 75 லட்சம் மட்டுமே அந்த பணம் வசூல் செய்த நிலையில், படிப்படியாக படத்தின் வசூல் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். இரண்டாம் நாள் 1.18 கோடி வசூல் செய்த ஹிப்ஹாப் ஆதி திரைப்படம் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 1.6 கோடி ரூபாய் ஓசூர் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாட்களில் பிடி சார் திரைப்படம் 3.7 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திங்கட்கிழமை முதல் இரண்டாம் வாரம் வெற்றிகரமாக அந்த படம் ஓடினால் 10 கோடி ரூபாய் ஒரு சொல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் ஹிட் அடிக்க வேண்டும் என்றால் சுமார் 20 கோடி வசூல் ஆவது அள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.