நடிகை மல்லிகா ஷெராவத் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறுவயதில் டெல்லியில் பள்ளி படிப்பை முடித்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை முடித்தார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் தொழிலில் ஈடுபட்டார்
அதன் பிறகு தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்த மல்லிகா ஷெராவத், கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
ஹாலிவுட் படத்தை தழுவி எடுத்த ரஜினியின் ‘கழுகு’.. ரசிகர்களுக்கு புரியாததால் தோல்வி அடைந்த பரிதாபம்..!
ஆனால் அதன் பிறகு அவர் ’மர்டர்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அந்த படத்தில் அவர் கிளாமரில் கலக்கி இருந்ததால் ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தான் கடந்த 2005ஆம் ஆண்டு ஜாக்கிசான் நடித்த ’தி மித்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மல்லிகா ஷராவத்துக்கு கிடைத்தது.
ஜாக்கிசானுடன் இணைந்து அந்த படத்தில் அதிரடி ஆக்சன் காட்டிருப்பார். அந்த படம் அவருக்கு உலக அளவில் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் மணிரத்னம் இயக்கிய குரு என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் கேரக்டரில் நடித்திருந்தார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த முகம் ஹீரோவுக்கு செட்டே ஆகாது… தவறான சிவாஜியின் கணிப்பு !
இந்த நிலையில் தான் தமிழில் அவர் நடித்த ஒரு திரைப்படம் தசாவதாரம். கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த இந்த திரைப்படத்தில் வில்லன் கமல்ஹாசனுக்கு துணையாக வருவார் மல்லிகா ஷராவத். அதிரடி ஆக்சன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நடிகை மல்லிகா ஷராவத்தை பல இயக்குனர்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவே பயன்படுத்தினார்கள்.
அவரது முழு திறமையையும் கொண்டுவரக்கூடிய அளவுக்கு அவருக்கு கேரக்டரை பல இயக்குனர்கள் கொடுக்கவில்லை. தமிழில் கூட சிம்பு நடித்த ஒஸ்தி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடமாடினார். மேலும் 2016 ஆம் ஆண்டு அவர் டைம் ரைடர் என்ற சைனீஸ் படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் மல்லிகா ஷராவத் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதற்கும் அவர் ஒரே சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு விளம்பர படங்களில் நடிப்பது உள்பட பல்வேறு வகைகளில் வருமானம் வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது அவருடைய சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்குமாம். ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த மல்லிகா ஷராவத், தன்னுடைய சொந்த உழைப்பில், எந்தவொரு திரையுலக பின்னணியும் இல்லாமல் முன்னேறி பணம் சம்பாதித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளி கதை…. எம்ஜிஆர் நடித்த “கலையரசி” என்ன சொல்கிறது…..?
மேலும் மல்லிகா ஷராவத் மிகவும் தைரியமானவர் என்றும் கூறப்படுவதுண்டு. தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை வெட்ட வெளிச்சமாக அவர் பேட்டியில் கூறி ஹிந்தி திரை உலகை அதிர வைத்தார். மல்லிகா ஷராவத் அவர்களுக்கு ஜாக்கிசான் உடன் நல்ல நட்பு உள்ளது. ஜாக்கிசான் எப்போது இந்தியா வந்தாலும் அவர் மல்லிகா ஷராவத்தை சந்தித்து செல்வதாக கூறப்படுகிறது.