அவங்க பயோபிக்ல நடிக்கணும்னு ரொம்ப நாள் கனவு.. மாளவிகா மோகனனின் பெரிய ஆசை..

Published:

இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக நிறைய பெரிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. விக்ரமின் தங்கலான், அஜித் குமாரின் விடாமுயற்சி, விஜய்யின் கோட், சூர்யாவின் கங்குவா, ரஜினிகாந்தின் வேட்டையன் என நிறைய பெரிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் ரசிகர்களின் தமிழ் சினிமா கொண்டாட்டத்திற்கு இனிமேல் அளவே இருக்காது.

அந்த வகையில் அடுத்ததாக நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முன்பு கேஜிஎப் எப்படி இருந்தது என்பதன் அடிப்படையில் உருவாகி உள்ளதாக தெரிகிறது. இதில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர், போஸ்டர் உள்ளிட்டவை சர்வதேச தரம் வாய்ந்து திகழ்வதால் நிச்சயம் படமும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் நடிகை மாளவிகா மோகனனுக்கும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு பேண்டஸி கலந்த வில்லி கதாபாத்திரமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அவருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

முன்னதாக தமிழில் மாளவிகா மோகனன் நடித்த நிறைய திரைப்படங்களில் அவரது கேரக்டர்கள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. இது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தாலும் கூட தங்கலான் படத்தில் அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கையிலும் மாளவிகா மோகன் இருந்து வருகிறார்.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் ஒரு பிரபலத்தின் பயோபிக்கில் நடிப்பதற்காக தான் விரும்புவது பற்றி சில கருத்துக்களை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன். எப்போதுமே எக்ஸ் தளத்தில் தொடர்ந்து ரசிகர்களின் கேள்வி மற்றும் கருத்திற்கு பதில் கருத்தை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மாளவிகா மோகனன்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் தெரிவித்த மாளவிகா மோகனன், “இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டது மிக வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் எனக்கு நீண்ட காலமாக பி.டி. உஷாவின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது.
PT Usha hopeful of hockey bronze medal to bring good fortune for Indian contingent - India Today

நான் வளர்ந்து வந்தபோது ஒரு சிறந்த தடகள வீராங்கனையாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த சமயத்தில் எல்லாம் பி.டி. உஷா தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக எனக்கு இருந்தார்” என மாளவிகா மோகனன் அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்திய தடகள வீராங்கனையாக தடம் பதித்த பிடி உஷா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும் தற்போது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...