நடிகர் திலகத்தின் அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டுவந்த இயக்குநர்.. அவரின் அசைவைக் கூட விட்டுவைக்காத இயக்குநர் மாதவன்!

Published:

ஒரு நடிகருக்கு எவ்வளவு தான் நடிப்புத் திறமை இருந்தாலும், அது சரியான இயக்குநர் கையில் சென்று சேரும் போது அதை மேலும் செம்மைப் படுத்தி அவர்களின் நடிப்புத் திறனுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுப்பர். இவ்வாறு நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மென்மேலும் கூர் தீட்டிய பெருமை இயக்குநர் மாதவனுக்கு உண்டு.

நடிக்க ஆசைப்பட்டு வாலாஜா பேட்டையில் இருந்து  சென்னை வந்தவருக்கு உதவி இயக்குநர் வாய்ப்பே கிடைத்திருக்கிது. பின்னர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் டி.ஆர்.ரகுநாத் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமாவைக் கற்றுக் கொண்டார். அதன்பின் சிவாஜி கணேசனை வைத்து தனது முதல் படமான மணியோசை படத்தி இயற்றினார். படம் தோல்வி, எனினும் விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்றது. அதன்பின்பு மீண்டும் நடிகர் திலகத்தினை வைத்து அன்னை இல்லம் என்ற வெற்றிப் படத்தினைக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து அவரின் அன்னை சத்யா மூவிஸ் சார்பில் தெய்வத்தாய் படத்தினை இயக்கினார். அந்தப் படம் வெற்றி அடைய திரையுலகில் கவனிக்க தக்க இயக்குநரானார் பி.மாதவன். எம்.ஜி.ஆரை வைத்து இவர் இயக்கிய கடைசி படமும் இதுவே.

தனது காதல் மனைவியை கரம்பிடிக்க பாட்டிலேயே அனுமதி கேட்ட வாலி.. கவிஞர் பெரிய ஆளுதான் போலயே..

அதன்பின்பு மளமளவென சிவாஜி கணேசனுடன் இணைந்தார். இவர்கள் கூட்டணி கிட்டத்தட்ட 15 படங்களில் இணைந்தது. இதில் ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களுக்காக தேசிய விருதினைப் பெற்றார்.  மேலும் எங்க ஊர் ராஜா, ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், ஹிட்லர் உமாநாத், வியட்நாம் வீடு, மனிதனும் தெய்வமாகலாம், தேனும் பாலும், பாட்டும் பரதமும் என பல வெற்றி படங்களை கொடுத்தார் மாதவன். சிவாஜி கணேசனின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து திரைப்படமாக்கி வெற்றி கண்டார் பி.மாதவன்.

ஒரு இயக்குநர் தன்னுடைய நடிகனை எவ்வாறெல்லாம் செதுக்குகிறார் என்பதற்கு பி.மாதவன், சிவாஜி கணேசன் கூட்டணி தகுந்த எடுத்துக்காட்டு. இருவருமே எனது நடிப்பா, உனது இயக்கமா என போட்டி போட்டு வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். மேலும் பி.மாதவன் ஜெய்சங்கர், முத்துராமன் போன்றோரை வைத்தும் பல படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...