ரசிகர்கள் கொண்டாடினாலும் இதெல்லாம் தேவையா என ‘கோட்’ படத்தில் இருக்கும் சில விஷயங்கள்..

Published:

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் கோட். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் உலக அளவில் கோட் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரோகிணி தியேட்டர் உரிமையாளர் கூட தமிழ் நாட்டில் மட்டும் 36 கோடி வசூல் செய்திருக்கும் என்று கூறியிருந்தார்.

விஜயின் இதற்கு முந்தைய திரைபடங்களான லியோ, பீஸ்ட் போன்ற படங்களும் இதே மாதிரியான வசூலைத்தான் முதல் நாளில் பெற்றது. கோட் படம் ரசிகர்களின் கொண்டாட்டமாக மாறினாலும் அதில் இருக்கும் சில விஷயங்கள் ரசிகர்களை பல வகைகளில் குழப்பமடைய வைத்திருக்கிறது.

அதாவது இந்தப் படத்தில் விஜயின் மகனாக வரும் இளவயது விஜயின் கேரக்டர் பெயர் சஞ்சய். விஜயின் மகனின் உண்மையான பெயரும் சஞ்சய்தான். அதனால் மகன் மேல் உள்ள பாசத்தால் இந்தப் படத்திலும் மகன் பெயரை வைத்திருப்பார் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.

ஆனால் படத்தில் கடைசியில் மகனிடம் உன்னை இந்தளவுக்கு மாற்றியது யார் என்ற கேள்வியை கேட்டிருப்பார் விஜய். இது தன் சொந்த குடும்ப பிரச்சினையை படத்தின் மூலம் வெளிப்படுத்தினாரா விஜய் என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

அடுத்ததாக மட்ட பாடலுக்கு திரிஷா நடனம் ஆடியிருந்தார். பெரிய நடிகைகளை பொறுத்தவரைக்கும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட தயங்குவார்கள். அதுவும் ஒரு பெரிய கம்பேக்கிற்கு பிறகு இப்போதுதான் திரிஷா அடுத்தடுத்த நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எப்படி ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்தார் என்றும் ஒரு டாக் போய்க்கொண்டிருக்கிறது.

மேலும் அர்ச்சனா கல்பாத்தியின் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் திரிஷா. அதில் தனக்கு பிடித்த ஹீரோ ஹீரோயின் விஜய் மற்றும் திரிஷா என அர்ச்சனா சொல்லியிருப்பார். அதை திரிஷா பகிர்ந்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோவில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடி அடுத்ததாக கோட் படத்திலும் ஒரு பாடலில் சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். ஏன் இந்தளவுக்கு திரிஷாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

அதை போல் சிவகார்த்திகேயன் வரும் சீனில் ஒரு டையலாக். இனிமேல் இவங்கள நான் பார்த்துக் கொள்கிறேன் என சிவகார்த்திகேயன் சொல்லும் போது திரையரங்கமே அதிர்ந்தாலும் இன்னும் ஒரு படம் பாக்கி வைத்திருக்கும் விஜய்க்கு ஏன் இவ்வளவு அவசரம்? என் இடத்தில் இருந்து சிவகார்த்திகேயன்தான் இனிமேல் இந்த திரையுலகை ஆளப்போகிறார் என்று விஜய் சொல்லாமல் சொன்னதுக்கு என்ன காரணம் என பெரிய சந்தேகத்தையே எழுப்பியிருக்கிறது.

 

 

மேலும் உங்களுக்காக...