’இனிமேல்’ பாடலில் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!.. லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஜோடி சூப்பரா இருக்கே!..

Published:

கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் கமல் எழுதி சில வரிகள் பாடியும் உள்ள ’இனிமேல்’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்ருதியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார் என்றதை அறிந்ததும் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

இனிமேல் பாடல் வெளியீடு:

இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் சமீப காலமாக நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கைதியாக நடித்த லோகேஷ் கனகராஜ் இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜாகவே கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

தற்போது, கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் வீடியோ பாடலில் அவருக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான டீசர் பரபரப்பை தூண்டும் விதமாக ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை மட்டும் கட் செய்து வெளியிட்டனர்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள முழு பாடலில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் அழகான காதல் பாடலாகவும் இளம் காதலர்கள் இடியை ஏற்படும் மனக்கசப்பு, சண்டை அதன் மூலம் நடக்கும் பிரிவு உள்ளிட்டவற்றை அடுக்கி பாடலை உருவாக்கியுள்ளனர்.

துவாரகேஷ் பிரபாகர் என்பவர் இந்த ஆல்பம் பாடலை இயக்கி உள்ளார். ஸ்ருதிஹாசன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பாடியுள்ளனர். சலார் படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்த நிலையில், ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர் இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்ததாக ஸ்ருதிஹாசன் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

வெறும் ரொமான்ஸ் பாடலாக இல்லாமல், புதிதாக காதலித்து திருமணம் செய்து கொள்ளும் இளம் ஜோடியினர் இதையே இப்படி எல்லாம் சண்டை உருவாகிறது, அது விவாகரத்துக்கு எப்படி இட்டுச் செல்கிறது என்பதை தெளிவாக இந்த பாடல் மூலம் காட்டி இருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் பாயாகவும், கோபம் வந்த கணவராகவும் தூக்கி போட்டு உடைக்கும் இடங்களிலெல்லாம் தூள் கிளப்புகிறார். எங்கே ஸ்ருதிஹாசனையும் கழுத்து அறுத்து கொன்று விடுவாரோ என்கிற அச்சம் கடைசிவரை ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், சுபமான முடிவையே கொடுத்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...