தொடங்கிய முன்பதிவு… சூப்பர் ஸ்டாரின் வசூலை முறியடிக்குமா தளபதியின் லியோ?

By Nithila

Published:

தளபதி விஜய்யின் ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதியன்று ரிலீஸாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க மக்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிறது.

படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ‘லியோ’ படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு இருப்பதற்கு முதல் காரணம் இது தளபதியின் படம். இரண்டாவது காரணம் ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை போல ரத்தம் தெறிக்கும் ரக சினிமாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது லோகேஷ் கனகராஜ்.

அவர் பற்றிய அறிமுகம் இல்லாத சமயத்திலேயே ‘மாநகரம்’ படம் வரவேற்பை பெற்றது. கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார். இதனால், தளபதியுடன் இணைந்திருக்கும் இரண்டாவது படம் ‘லியோ’ என்பதால் திரையுலகமும், ரசிகர் பட்டாளமும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

‘ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ எனும் ஆங்கிலப்படத்தின் படத்தின் தழுவல்தான் ‘லியோ’ என்று சொல்லப்பட்டு வருகிறது. ‘ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ படமும் பயங்கர வெற்றியை அடைந்த படம் என்பதால், அந்தக் கதையோடு லோகேஷின் ‘LCU’-வும் இணைந்திருப்பது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

‘லியோ’-வில் தளபதியுடன், சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், மிஷ்கின் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், தனுஷ், சூர்யா, கார்த்தி என வேறு யாரும் புதிதாக வந்து, அதிர்ச்சி கொடுப்பார்களா? என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி விஜய் அரசியலுக்கு வரபோகிறார் என்ற பேச்சு வார்த்தை இருந்து வந்ததது. ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் அதுகுறித்து பேசுவார். குட்டிக்கதை சொல்லுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

சில பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை தமிழக அரசு ரத்து செய்தது. அது மேலும் ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் படத்தை பார்த்தே ஆக வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்நிலையில், லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கவுள்ளது. கோவையில் ஒரு திரையரங்களில் முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு இணையாக வணிக ரீதியில் இருப்பது தளபதி விஜய் படங்கள் தான். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படம் பெற்ற லாபம் ரூ. 700 கோடி என்று சொல்லப்படுகிறது.

தளபதியின் ‘லியோ’ அந்த சாதனைக்கு இணையான வெற்றியை அடையுமா? அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் வசூல் செய்யுமா? என பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘லியோ’ திரைக்கு வர இருக்கிறது.

பாடகர் எஸ்.பி.பிக்கு இப்படி ஒரு ஆசையா.. நிறைவேறாமல் போனது எப்படி?