பாடகர் எஸ்.பி.பிக்கு இப்படி ஒரு ஆசையா.. நிறைவேறாமல் போனது எப்படி?

சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் பொதுவாக தம் சினிமாவின் இறுதி காலத்திற்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படித்தான் பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கும் ஒரு எண்ணம் இருந்துள்ளது. அந்த ஆசை நிறைவேறியதா.. இல்லையா.. என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

இந்திய சினிமாவில் அசைக்க முடியாத பிரபல பாடகராக வலம் வந்தவர் தான் எஸ்பிபி. இவருடைய திரை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 16 இந்திய மொழிகளில் பாடி மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

1966-லிருந்து தொடங்கிய எஸ்பிபியின் சினிமா பயணம் அவரின் இறுதி காலம் வரை வெற்றிப் பயணமாகவே அமைந்தது. எஸ்பிபி அவரை திரைத்துறையில் எல்லோரும் செல்லமாக பாடும் நிலா என்று அழைப்பதே வழக்கம். இவர் ஒரு சிறந்த பாடகராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

பல கச்சேரிகளை நடத்துவது, பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடுவராக மக்களை மகிழ்விப்பது என தம் மண்ணில் இருந்த காலம் வரை இசைக்காகவே வாழ்ந்த ஒரே மனிதர் எஸ்பிபி அவர்கள் தான். அது மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆறு முறை சிறந்த ஆண் பாடகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் எஸ்பிபி அவர்கள் வாங்காத விருதுகளை இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தன் பாடல்கள் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். மேலும் இசைஞானி அவர்களின் இசையில் எஸ்பிபி அவர்கள் பாடிய பாடல்களுக்கு அடிமையாகாத இசை ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு இருவர் கூட்டணியில் உருவாகிய அனைத்து பாடல்களும் பெரும்பாலும் வெற்றியவே தழுவியுள்ளது.

டான்ஸராக சினிமாவில் உழைத்து ஹீரோவாக மாறிய ஐந்து டாப் ஹீரோக்களின் லிஸ்ட்!

பிரபலத்தின் உச்சியை அடைந்த எஸ்பிபி அவர்களிடம் ஒரு பேட்டியில் நீங்கள் சிறந்த பாடகராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளீர்கள். அடுத்து உங்களது இலக்கு என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எஸ்.பி.பி இன்னும் ஐந்து, ஆறு வருடங்கள் மட்டுமே தான் பாடப் போவதாகவும் அதன் பின் பாடலை நிறுத்திவிட்டு சினிமாவின் அனைத்து துறைகளிலும் தான் கால் பதிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

சினிமாவின் எல்லா துறைகளின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அதன்பின் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் இந்த ஆசை இறுதி வரை நிறைவேறாமல் போனது எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கு ஒரு மனக் குறையாகவே மாறி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...