LEO: விஜய் பிறந்தநாளில் வெளியான 1st LOOK போஸ்டர்.. டிசைனர் இவரா? முழு தகவல்

Published:

விஜய் நடிக்கும் லியோ படத்தின் முதல் லுக் போஸ்டர் டிசைனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஜூன் மாதம் 22 ஆம் தேதி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியானது.

WhatsApp Image 2023 06 19 at 7.08.37 PM

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்தனர்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார்.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67-வது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

WhatsApp Image 2023 06 19 at 7.08.44 PM

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 06 22 at 8.34.09 AM 1

இந்நிலையில் லியோ படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு போஸ்டர் வெளியாகி உள்ளது. கழுதைப்புலி உடன் விஜய் ஆக்ரோஷமாக இருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். கோபி பிரசன்னா, ஏற்கனவே பிகில், மாஸ்டர், வாரிசு, பீஸ்ட் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்துள்ளார்.

லியோ படத்தினை அடுத்து நடிகர் விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்க உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

மேலும் உங்களுக்காக...