லியோ படத்தில் இத்தனை பிரபலங்களா.. படத்தில் கேமியோ ரோல் தான் விஜய்க்கா?

Published:

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படத்தை தொடர்ந்து வெளியாக உள்ள திரைப்படம் தான் லியோ. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால் தமிழ் நடிகர்கள், நடிகைகள் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தியில் திரையுலகில் உள்ள டாப் நடிகர்களை எல்லாம் லோகேஷ் அவர்கள் லியோ படத்தில் களம் இறக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஒட்டுமொத்தமாக 24 முன்னணி இந்திய பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பிரபலங்கள் அனைவரையும் வைத்து படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதில் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், யாரை அதிகம் உயர்த்தி காட்ட வேண்டும் என பல குழப்பத்தில் படத்தின் எடிட்டர் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் எவர் கிரீன் ஜோடியான விஜய் மற்றும் திரிஷாவை 14 வருடத்திற்கு பின் மறுபடியும் லோகேஷ் லியோ படத்திற்காக இணைத்துள்ளார்கள். அவர்களை தொடர்ந்து சமீபத்தில் மறைந்த மனோபாலா, கைதி படத்தில் கலக்கிய ஜார்ஜ் மரியான், மேத்தியூ தாமஸ், பாலிவுட் ஸ்டாரான சஞ்சய் தத், மலையாள சூப்பர் ஸ்டாரான நிவின்பாலி, கமலஹாசன், மன்சூர் அலிகான், வில்லன் நடிகர் பாபு ஆண்டனி, நடிகை அபிராமி, நடிகர் சூர்யா, கைதி படத்தில் மிரட்டலாக நடித்த அர்ஜுன் தாஸ், பகத் பாசில் இவர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஸ்கின், பாலிவுட் நடிகர் ஸ்மித் , நடிகர் ஹாரிஸ் உத்தமன், நடிகை பிரியா ஆனந்த், ஆக்சன் கிங் அர்ஜின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகர் சத்தியராஜ், நடிகர் கதிர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர கூட்டத்தை களமிறங்கியுள்ளனர்.

இந்த படத்தில் ஒட்டுமொத்த திரை பட்டாளமே இணைந்தும் நடித்துள்ளனர் என்பதால் படத்தின் மிக நெருக்கடியான வேலை படத்தை முறையாக எடிட்டிங் செய்வது தான். அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் குறையாத அளவில் படத்தின் வெளிப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகின்றனர்.

விஜய்யின் ரீமேக் படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!

பொதுவாக பெரிய ஹீரோக்கள் படங்களில் கேமியோவாக ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் மற்ற நடிகர்கள் வந்து கலக்குவது தற்பொழுது டிரெண்டிங் தான், ஆனால் படம் முழுக்க அடுத்தடுத்து பிரபலங்களை களமிறங்கி இருப்பது சரியாக அமையுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இதனால் லியோ படத்தில் ஹீரோவாக விஜய்யின் காட்சிகள் குறைக்கப்படுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் உங்களுக்காக...