விஜய்யின் ரீமேக் படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி, தற்பொழுது ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவரது ராசியான நடிகை நயன்தாராவை ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தில் ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகிபாபு, விஜய்சேதுபதி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜவானின் டிரெய்லர் சமூகவலைத் தளங்களிலும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அட்லியின் அடுத்த படம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி அஸ்வினிற்கு திருமணம்! பொண்ணு யாரு தெரியுமா..

தமிழில் 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து திரைப்படம் தான் தெறி. இந்த படத்தை தற்பொழுது அட்லி இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அட்லி தயாரிக்கும் இந்த படத்தில் அவருக்கு நெருக்கமான நடிகை மற்றும் தோழியான கீர்த்தி சுரேஷ்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

மேலும் பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் காளிஸ் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்தும் உறுதியாகும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...