லியோ 3வது சிங்கிள்!.. “அன்பெனும் ஆயுதம்” காஷ்மீரில் எழுதிய அழகிய கவிதையாக இருக்கே!

Published:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. லியோ படத்தின் முதல் ஷெட்யூல் காஷ்மீரில் படமாக்கப்பட்ட நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடல் போலத்தான் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இருவேறு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பது போல காட்டுகின்றனர். பிரபல ஹாலிவுட் படமான ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் தழுவல் என கூறப்படும் நிலையில், கேங்ஸ்டர் ஆன லியோ தாஸ் ஒரு பெரிய சம்பவத்திற்கு பிறகு கேங்ஸ்டர் தொழிலை விட்டுவிட்டு த்ரிஷாவை பார்த்ததும் காதலில் விழுந்து பார்த்திபன் ஆக மாறி அவருடன் வாழ்ந்து வருகிறார் என்றே தெரிகிறது.

லியோ கதை இதுதான்:

தனது குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை என தெரிந்ததும் மீண்டும் லியோ தாஸாக மாறி எதிரிகளை புரட்டி எடுத்து விட்டு மீண்டும் பழையபடி தனது குடும்பம் வாழ்க்கையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கும் திரிஷாவுக்கும் மகனாக மலையாள நடிகர் மேக்யூ தாமஸ் நடித்துள்ளார். மாளவிகா மோகனுக்கு ஜோடியாக நடித்த அதே மேத்யூ தாமஸ் தான். மகளாக காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் இயல் நடித்துள்ளார்.

கெளதம் மேனனுக்கு பிரியா ஆனந்த் ஜோடி:

குடும்ப நண்பரும் போலீஸ் அதிகாரியுமான கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் அவருக்கு மனைவியாக நடிகை பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அன்பெனும் ஆயுதம் பாடலில் பார்த்திபனின் குடும்பம் மற்றும் நண்பரின் குடும்பத்தையும் தெளிவாக காட்டி உள்ளனர். லியோ படத்தின் முதல் பாடலாக இந்தப் பாடல்தான் இடம் பெறுமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹீரோவுக்கான இன்ட்ரோ சாங் இருக்காது என்று கூறியிருந்தார்.

க்யூட்டான குடும்ப பாடல்:

லியோ படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் நான் ரெடி தான், பேட் அஸ் பூரித்த பாடல்களை தாறுமாறாக போட்ட நிலையில், செம ரொமான்டிக் மெலடியாக அன்பெனும் ஆயுதம் பாடலை கொடுத்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ரத்தமாரே பாடல் கொடுத்தது போல லியோ படத்தில் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இப்படி ஒரு க்யூட்டான குடும்ப பாடலை கொடுத்து தூள் கிளப்பியுள்ளார்.

லியோ படத்தின் டிரைலரில் இடம் பெற்ற அந்த ஆபாச வார்த்தை பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது மியூட் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சர்ச்சையில் இருந்து நடிகர் விஜய்யை இந்த பாடல் காப்பாற்றும் என்றும் கருதப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...