லியோ சர்ச்சை பற்றி பேசி விஜய் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான இமான் அண்ணாச்சி..!

விஜய் படங்கள் என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லும் அளவிற்கு சமீப காலமாக அவரது படங்கள் இருந்து வருகிறது. ஏன் சர்ச்சைதான் அவரது படங்களுக்கு ப்ரமோஷன் ஆகவும் இருக்கிறது. அந்த வரிசையில் அக்டோபர் 19ஆம் தேதி வரவிருக்கும் லியோ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. விஜய் பட டிரெய்லர் என்றால் சர்ச்சை இல்லாமலா..? அப்படி டிரெய்லரில் அவர் பேசிய கெட்ட வார்த்தை ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வயது வரம்பின்றி பல தரப்பு ரசிகர்களை வாரிக் குவித்துள்ள விஜய் இப்படி பேசி இருப்பது சமூகப் பொறுப்பற்ற செயல் என பலரும் விமர்சிக்கின்றனர்.

மேலும் அரசியல் ஆசை உள்ள இவர் இவ்வாறு பேசி நடந்து கொள்ளலாமா எனவும் கேள்விகள் எழுப்புகின்றனர். இவ்வளவு ரணகளத்திற்கும் மத்தியில் லோகேஷ் கனகராஜ் விஜய் அவ்வாறு பேசியதற்கு முழு காரணமே நான் தான் என்றும் முழு பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மேலும் அதனால் வரும் விளைவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்திலிருந்து வெளியான முதல் பாடலான ‘நான் ரெடி தான்’ பாடலில் விஜய் சிகரெட் பிடித்ததுமட்டுமின்றி பாடலின் வரிகளுமே சர்ச்சைக்கு தொடக்க புள்ளியானது.

அந்த சர்ச்சையே நீங்காத நிலையில் தற்போது அதையே முந்திக்கொண்டு டிரெய்லர் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படி சர்ச்சை இருக்கையில் தானாக முன்வந்து விஜய் ரசிகர்களை வம்பிற்க்கு இழுத்துள்ளார் சொல்லுங்கண்ணே சொல்லுங்க புகழ் இமான் அண்ணாச்சி. இயக்குனர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சமூக விரோதி’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் இமான் அண்ணாச்சி.

அப்போது திடீரென விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் விதமாக பேசினார். ஒரு படத்தின் டிரைலரில் ‘சிகரெட் பிடித்து, கெட்ட வார்த்தை பேசினால் போதும் படம் ஹிட்டு’ என சூசகமாக விஜயை விமர்சித்து பேசியுள்ளார். சிகரெட் சர்ச்சை ரஜினிகாந்தின் பாபா படத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. பல நடிகர்கள் தங்களின் படத்தில் சிகரெட் பிடிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது போன்ற தீய பழக்கங்களை எல்லாம் ஹீரோயிசமாக காட்டியுள்ளனர்.

ஆனால் விஜய்க்கு மட்டும் அது அதிகம் பேசப்பட்டு சர்ச்சையாக வெடிக்கிறது. விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்று அவரது ரசிகர்கள் மீம்ஸ்கள் வாயிலாகவும் வீடியோக்கள் வாயிலாகவும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இமான் அண்ணாச்சி இப்படி பேசி இருப்பது விஜய் ரசிகர்களிடையே மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் பலர் அவரது கருத்துக்கு வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.