எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..

By John A

Published:

திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு எப்போதுமே கோபமும், சமுதாய உணர்ச்சியும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான் இவர்களது மேடைப் பேச்சுக்களில் அனல் தெறிக்கும். தந்தை பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோர் மேடைப் பேச்சுக்களில் திராவிட இயக்கக் கொள்கைகளை உணர்ச்சி ததும்பப் பரப்புவர்.

இவ்வாறு இவர்கள் மேடைப் பேச்சுக்களில் செய்ததை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோ சப்தமே இல்லாமல் பாடல்களிலும், கவிதைகளிலும், உரைநடைகளிலும் திராவிட சித்தாந்தங்களைப் பரப்ப ஆரம்பித்தார். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாரதிதாசனே. இவரையொற்றியே அடுத்து வந்த தலைவர்கள் தங்களது பேனாமுனையாலும் திராவிட இயக்கங்களை சினிமாவிலும், நாடகங்களிலும் வசனங்கள் மூலம் வளர்க்க ஆரம்பித்தனர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பாடல், தயாரிப்பு என சினிமாவிலும் தனது பங்கை ஆற்றினார். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ‘மணிக்கொடி’ இதழின் இலக்கிய நண்பர்களும், ‘சுதந்திரச் சங்கு’ பத்திரிக்கையின் ஆசிரியரான சங்கு சுப்ரமணியமும் இணைந்து ‘இராமானுஜர்’ என்ற படத்தினைத் தயாரிக்க முடிவு செய்து அதில் பாவேந்தர் பாரதிதாசனை பாடல்கள் எழுத வைத்தனர். அப்போது புதுவை நெட்டப்பாக்கத்தில் வசித்து வந்த பாரதிதாசன், இராமானுஜன் படத்தின் பணிகளுக்காக குடும்பத்துடன் சென்னை வந்தார். மேலும் பாடல்களுக்குத் தகுந்த கைநிறைய பணமும் தருகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டது.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்

இதனால் இப்படத்தின் வசனகார்த்தாவாகப் பணியாற்றிய வ.ரா.வின் அழைப்பினை ஏற்று சென்னை வந்தார் பாரதிதாசன். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் பல பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இப்படி புரட்சிக் கவி பாரதிதாசன் தான் எழுதிய பாடல்களில் ஒருபோதும் இசையமைப்பாளர்கள் திருத்தம் செய்வதை ஏற்றுக் கொண்டதே இல்லை.

சேலகம் மார்டன் தியேட்டர் தயாரித்த 1952-ல் வெளிவந்த வளையாபதி படத்தில் இடம்பெற்ற ‘கமழ்ந்திடும் பூவில் எல்லாம் தேனருவி’ என்ற பாடலை பாரதிதாசன் எழுதியிருக்கிறார். ஆனால் இதில் இடம்பெற்ற கமழ்ந்திடும் என்ற வார்த்தையானது இசையமைப்பிற்கு சரிவராதால் இசையமைப்பாளர் தட்சிணாமூரத்தி ‘குலுங்கிடும்’ என்ற வார்த்தையைப் போட்டுள்ளார்.

இதனையறிந்த பாவேந்தர் பாரதிதாசன் கோபமுற்று, “எவண்டா என் பாட்டை மாற்றியவன்? குலுங்கிடும் பூவில் எப்படி தேனருவி வரும்” என்று கொதித்தெழுந்து அவர் மாடர்ன் தியேட்டருடன் 40 ஆயிரம் ரூபாய்க்கு போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து அதன் வாசலிலேயே விட்டெறிந்து வந்திருக்கிறார். இவ்வாறு இந்த வரியை மாற்றியவர் யார் தெரியுமா? கவியரசர் கண்ணதாசன் தான். இசையமைப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மாற்ற அது பெரிய கவிப்போராக வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.