எஸ்.பி.பி-க்குப் போன் செய்த எம்.எஸ்.வி., ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் நடந்த அந்த ஒரு நிகழ்வு

Published:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மெல்லிசை மன்னரையும் விட்டு வைக்கவில்லை என்றே சொல்லாம். இந்திய இசைத் துறைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். இசையால் பல கோடி இதயங்களைக் கட்டிப் போட்டவர். ஆனால் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் எடுக்கும் முயற்சிகள் தான் அவரது புகழ் இன்றளவும் நிலைத்திருக்கக் காரணம். பி.சுசீலா, எம்.எஸ்.விஸ்வநாதன் என அந்தக் காலத்து இசைமேதைகள் முதல் அனிருத் வரை அனைவரையும் தனது இசையில் பாட வைத்தார்.

அப்படி பி.சுசீலாவிற்கு எப்படி நேற்று இல்லாத மாற்றம் என புதிய முகம் படத்தில் பாட வைத்து தனக்குப் பெருமை சேர்த்தாரோ அதே போல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை சங்கமம் படத்தில் ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா என கிராமிய பாட்டினைப் பாட வைத்திருப்பார்.

சங்கமம் படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதனை ஏ.ஆர்.ரஹ்மான வேலைவாங்கியதை எம்.எஸ்-வி. பாடும் நிலா எஸ்.பி.பியிடம் போன் போட் பெருமையாகக் கூறியிருக்கிறார். சாதாரணமாக பாடல் பதிவு நடைபெற்ற உடனே கேட்டுப் பார்ப்பது அன்றைய காலத்து வழக்கம். இதை எதிர்பார்த்துச் சென்ற எம்.எஸ்.வி-க்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எம்.எஸ்.வி-யிடம் பல தொணிகளில் பாட வைத்திருக்கிறார். பாடல் வரிகளைக் காட்டி மெட்டைப் போட்டதும் பாடுங்கள் என்று கூற எப்படி என்று சொல்லிக் கொடுங்கள் என்றிருக்கிறார் எம்.எஸ்.வி.

எனக்கு அப்பான்னு கூப்பிடணும்னு தோணுச்சுனா இவருக்கு கால் பண்ணிடுவேன்… கண்கலங்கிய VJ ரக்ஷன்…

ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கோ தயக்கம். இவ்வளவு பெரிய லிஜண்டுக்கு நாம் எப்படி சொல்லிக் கொடுப்பது என்று. ஆனால் எம்.எஸ்.வி. நான் இசையமைப்பாளராக இருந்திருந்தால் சொல்லிக் கொடுத்துத் தான் பாட வைப்பேன் என்று கூற, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தயக்கம் உடைந்தது. எம்.எஸ்.வி-யின் அத்தனை குரல்களையும் பாட வைத்துப் பதிவு செய்தார். பின்னர் பாடல் பதிவு முடிந்தவுடன் ஒரு பெரிய தொகையை எம்.எஸ்.வி-யிடம் கொடுத்து நன்றி சொல்லி வழியனுப்பி இருக்கிறார்.

எம்.எஸ்.வி அவர்கள் தான் பாடிய பாட்டை கேட்க ஆசைப்பட சில எடிட்டிங் வேலைகள் இருக்கிறது. முடிந்தவுடன் போட்டுக் காட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார். எம்.எஸ்.வி-க்கு ஒன்றும் புரியவில்லை. இந்நிலையில் சங்கமம் படம் வெளியாகி பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஒருமுறை எம்.எஸ்.வி தான் பாடிய ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா பாடலை வானொலியில் கேட்க இது நம் குரலா என வியந்து போயிருக்கிறார்.

தான் கொஞ்சம் கொஞ்சமாக பாடியதை ரெக்கார்டிங் செய்து எடிட்டிங்கில் இசை கோர்ப்பு செய்து சூப்பர் ஹிட் பாடலாக மாற்றியிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இதனால் எம்.எஸ்.வி பெரிதும் மகிழ்ச்சி அடைந்து தன்னுடைய அனுபவத்தை பாடகர் எஸ்பிபி சொல்லி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...