சாதாரணமாக ஒருவருக்கு மக்களால் பட்டம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. ஆனால் இத்தகைய பட்டங்கள் ஏராளமானவற்றிற்குச் சொந்தக் காரர் என்றால் அது நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். மக்கள் திலகம், இதய தெய்வம், பொன்மனச் செம்மல், கலியுகக் கர்ணன், புரட்சித் தலைவர், என மக்கள் இவருக்கு அளித்த பட்டங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனை பட்டங்கள் மக்கள் அளித்தாலும் எதையுமே தனது தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
இதுகுறித்து அப்போது பொம்மை இதழில் எம்.ஜி.ஆரைப் பேட்டி கண்ட ஜெயலலிதா அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், “சினிமா உலகில் உயர்ந்த இடத்தை அடைந்து விட்டீர்கள். நீங்கள் விரும்பிய லட்சியத்தை அடைந்து விட்டோம் என்று பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?” என்று கேள்வியெழுப்பி இருப்பார்.
அதற்கு எம்.ஜி.ஆரின் பதில் இதான்.
அ க்காலத்தில் இந்திய மேடை நாடகப் புலி என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டவர் பி.எஸ்.கேசவன்.இரு சகோதரர்கள் படத்தில் இவர் நடித்த போது அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் எம்.ஜி.ஆர். இரு சகோதரர்கள் படம் சென்னையில் உள்ள நியூ எல்பின்ஸ்டன் திரையரங்கில் வெளியானது. அந்தப் படத்தின் முதல்காட்சியைப் பார்க்கச் சென்றனர் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.கேசவனும். இடைவேளையில் பி.எஸ்.கேசவனைக் கண்ட ரசிகர்கள் அவரைச் சூழ்ந்தது. அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
அப்போது இவ்வளவு புகழ் வாய்ந்த நடிகர் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோம் என உள்ளுக்குள் பெருமிதப் பட்டுக் கொண்டார். மேலும் படம் முடிவதற்குள் இருவரும் கிளம்ப அதை அறிந்த ரசிகர்கள் பி.எஸ்.கேசவனைப் புடை சூழ்ந்து கொண்டனர். அப்போது ரசிகர்களிடம் இருந்து அவரை பத்திரமாக காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆரை ரசிகர்களால் அடையாளம் காண இயலவில்லை.
பாக்யராஜ் கேட்ட உதவி.. செய்ய மறுத்த ரஜினி.. காரணம் இதானா? சீக்ரெட் உடைத்த பாக்யராஜ்
நாட்கள் சென்றன. காற்று எம்.ஜி.ஆர் பக்கம் வீசத் தொடங்கியது. அப்போது எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த மர்மயோகி படம் சென்னை நியூ குளோப் தியேட்டரில் வெளியானது. படத்தைப் பார்க்க அதே இருவரும் சென்றனர். முன்னர் சொன்ன சம்பவம் அப்படியே எம்.ஜி.ஆருக்கு நிகழ்ந்தது. ஆனால் அருகில் இருந்த பி.எஸ்.கேசவனை யார் என்று கூட மக்கள் அறிந்திருக்கவில்லை.
அப்போது தான் எம்.ஜி.ஆர் உணர்ந்தார். கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு புகழ் மயக்கமே. கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி என்பதே இல்லை. சூழ்நிலைதான் அவனை உயர்த்தும், தாழ்த்தும் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.