எம்.என். நம்பியாரை ஆஹா.. ஓஹோவென புகழ்ந்து வந்த கடிதம்.. வில்லாதி வில்லன் கொடுத்த ஃதக் லைப் ரிப்ளே

Published:

கைகளைப் பிசைந்து கண்ணிலேயே மிரட்டி அந்தக் கால சினிமா ரசிகர்களை தனது வில்லத்தனமான நடிப்பால் கவர்ந்தவர் எம்.என். நம்பியார். நாடகக் குழுவில் சமையல் உதவியாளராக தன் வாழ்க்கையைத் துவக்கிய மாஞ்சேரி நாராயணன் நம்பியார் பின் படிப்படியாக உயர்ந்து ‘கவியின் கனவு’ என்ற நாடகத்தில் ராஜகுரு வேடம் ஏற்று, முதல் வில்லன் நடிப்பை மேடையில் வெளிப்படுத்திப் புகழ்பெற்றார். அப்பொழுது இவர் வயது 23.

வில்லன்களுக்கே வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கே இலக்கணம் எழுதியவர் எம்.என்.நம்பியார்.  இவரது வில்லத்தனத்தைப் பார்த்தவர்கள் இவரை திட்டி தீர்ப்பர். இதுவே அவரது கதாபாத்திரங்களுக்குக் கிடைத்த வெற்றி.

மேலும் இவரை எல்லோருமே வில்லனாகப் பார்த்தாலும், “ரகசியப் போலீஸ் 115“, “பாசமலர்“, “கண்ணே பாப்பா“ போன்ற திரைப்படங்களில் இவரது குணசித்திர வேடங்களை பார்த்து கண்கலங்கியவர்கள் பலர். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் ஆஸ்தான வில்லன் நடிகராக உருவான எம்.என்.நம்பியாருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

எஸ்.பி.பி வராத காரணத்தால் கிட்டிய வாய்ப்பு.. மேடைப் பாடகர் மலேசியா வாசுதேவன் பின்னணிப் பாடகராக மாறிய நிகழ்வு

மேலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் திரைக்கு அப்படியே எதிர்மறையாக சாந்த குணமும், அமைதியான சுபாவமும் உடையவர். இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் ஏராளமான கடிதங்களை எழுதுவர். அப்படித்தான் நம்பியாரின் நடிப்பையும், குணத்தையும் பார்த்த மூத்த பத்திரிகையாளர் மேஜர் தாசன் என்பவர் ஏராளமான கடிதங்களை எழுதிக்கொண்டே இருந்தாராம். அதற்கு நம்பியார் பதிலளிக்காமல் இருந்திருக்கிறார். பல நாட்களுக்குப் பின் ஒருகட்டத்தில் நம்பியாரும் பதில் எழுதியிருக்கிறார்.

அக்கடிதத்தில் ‘தாமதமாக பதில் கடிதம் எழுதுகிறேன். எனது படங்களை எவ்வளவு விருப்பமாக பார்த்திருக்கிறீர்கள் என்பது நீங்கள் எழுதிய கடிதத்தின் மூலம் தெரிகிறது. உங்களை போன்ற ரசிகர்களால்தான் சினிமா சீரும் சிறப்புமாக இருக்கிறது. ஆனால் ஒன்று எனக்கு தெரிந்தவரைக்கும் நான் சுமாரான நடிகர்தான்.

வாரிசு வேண்டாம் என்று சொன்ன அதிரடி நாயகி.. மனம் திறந்த முதல் லேடி சூப்பர் ஸ்டார்

சிவாஜி போன்றவர்கள் இருக்கும்போது அவர்களை மீறி என்னால் எப்படி நடிக்க முடியும்“  என கூறியிருந்தாராம். இந்தச் சம்பவத்தை தனது வலைப் பக்கத்தில் பகிர்ந்த சித்ரா லட்சுமணன், தாமதமாக பதில் அளித்ததற்கு இந்தக் கடிதத்தில் நம்பியார் மறைமுகமாக மன்னிப்பும் கேட்டுவிட்டார்; சிவாஜி கணேசனையும் பெருமைப்படுத்திவிட்டார் என்றார்.

மேலும் உங்களுக்காக...