ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் நாளை உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தைப் பற்றி ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளை இங்கு பார்ப்போம்.
லால் சலாம். லால்னா சிவப்பு. அதுக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. சிவப்புன்னா கண் திருஷ்டி, வன்முறை, அபாயம், புரட்சிக்கு உபயோகப்படுத்துவாங்க. ஐஸ்வர்யா அதைப் புரட்சிக்கு உபயோகப்படுத்திருக்காங்க. சலாம்னா வணக்கம். புரட்சிக்கு வணக்கம்.
அந்தக் கதையே அப்படி. அது ரொம்ப புரட்சிகரமான கதை. அந்தக் கதையை எடுக்கும்போது எங்கிட்ட சொன்னாங்க. அதுக்கு வந்து நேஷனல் அவார்டு கிடைக்கும்னு சொன்னாங்க. அவார்டுன்னு சொன்ன உடனே நான் கதையைக் கேட்க மாட்டேன்னு சொன்னேன். இல்லப்பா இது உண்மையான கதைன்னு சொன்னாங்க. நல்லாருக்கும்மா… இதை யார் எடுப்பாங்கன்னு கேட்டேன். எழுத்தாளர், கேமராமேன் விஷ்ணு ஆனந்தவிகடன்ல பிரபல எழுத்தாளரா இருந்தார்.
அவர் ஒரு விஷயத்தை எடுத்து அதை வைச்சி கதை பண்ணிருந்தாரு. சரி. இதுல மொய்தீன் பாயா யார் பண்றாங்கன்னு கேட்டப்ப, யாரும் சரியா வரல. ஒருமுறை ஐஸ்வர்யா கிட்ட நான் சொன்னேன். நானே அந்தக் கேரக்டரைப் பண்றேன்னு சொன்னேன். அவங்க சிரிச்சிக்கிட்டே போயிட்டாங்க.
லால் சலாம் வந்து 4 விஷயங்களைப் பற்றிப் பேசும். சின்னக்குழந்தையா இருக்கும்போது ஏதாவது அவங்க மனசுல ஒரு தழும்பு வந்துட்டா அது அவங்க வாழ்க்கையையே பாதிக்கும். அதனால தான் சின்ன பசங்க மத்தியில ரொம்ப கவனமாக பேசணும்.
எனக்கு கூட இங்கிலீஷ்ல பேச சரியா தெரியாது. ஒரு தடவை அண்டர்ஸ்டண்டுக்கு அண்டவர்வேர்னு சொல்லிட்டேன். எல்லாரும் கூச்சம். அதுல இருந்து இங்கிலீஷ் பேசறதையே நிறுத்திட்டேன்.
மனைவியை செலக்ட் பண்றதை விட ரொம்ப முக்கியம் நண்பர்களை செலக்ட் பண்றதுதான். வாழ்க்கைல ரொம்ப நல்லா இருக்கணும்னா அது நண்பர்களால தான். நண்பருக்கும், எதிரிக்கும் ரொம்ப வித்தியாசம் கிடையாது. நண்பன்னா உள்ளே ஒண்ணும் வச்சிருக்க மாட்டான். எல்லாத்தையும் வெளியே கொட்டிருவான்.
ஆனா எதிரி அப்படி கிடையாது. எல்லாத்தையும் நம்ம சொல்ல சொல்ல கேட்டுக்குவான். அவன் எதையுமே சொல்ல மாட்டான். நாம பேசறதுதான் கேட்பான். எப்போ அவன் வெளியே சொல்வான்னு தெரியாது. ஆனா நாம சொல்றதை வெளியே சொல்லிக்கிட்டே இருப்பான். ஆனா நேரம் வரும்போது வெளியே போறேன்னு சொன்னா அவன் தான் நமக்கு மிகப்பெரிய எதிரியா இருப்பான். இந்த வித்தியாசம் தான்.
இந்தப்படம் நட்பைப் பற்றியும் பேசுது. விழாக்கள், தேர்த்திருவிழா, சம்பிரதாயம் இதை ஏன் செஞ்சிருக்காங்க. எதுக்கு செஞ்சிருக்காங்கன்னும் இந்தப் படம் சொல்லுது. அதை விட முக்கியமா மத நல்லிணக்கத்தைப் பற்றி இந்தப் படம் பேசிருக்கு.
நீ வந்து எந்த மதத்தில் இருந்தாலும் சரி. அதில் தீவிர பக்தியா உணர்வுள்ளவனா இருந்தா கடவுளை உணர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.