பாரதிராஜா செய்த அதே தவறு.. பாலசந்தரின் இயக்கத்தில் குஷ்பு நடித்த ஒரே படம்..!

By Bala Siva

Published:

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் குஷ்பு நடித்த ஒரே படம் கேப்டன் மகள். இது குஷ்புவின் படமாகவும் இல்லாமல் பாரதிராஜாவின் படமாகவும் இல்லாமல் இரண்டும் ரெண்டுங்கட்டானாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்பது நாம் அறிந்ததே.

இந்த நிலையில் கனவு கன்னி என்று ரசிகளால் போற்றப்பட்ட குஷ்புவை வைத்து இயக்குனர் சிகரம் பாலச்சந்தரும் ஒரு திரைப்படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். அந்த படம் தான் ஜாதி மல்லி.

கேப்டன் மகள் படம் போலவே இந்த படமும் பெரும்பாலும் ஊட்டியில் தான் படமாக்கப்பட்டது. ஊட்டிக்கு குஷ்பு, முகேஷ், வினித், யுவராணி, மதன்பாப், விசித்ரா ஆகிய ஆறு பேரும் வருவார்கள். இந்த ஆறு பேரும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரே வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்படும் போது அவர்களுக்குள் ஏற்படும் உறவு, பிரச்சனை, சண்டை, எமோஷனல் ஆகியவைதான் இந்த படத்தின் கதை.

ரஜினி படத்தில் அறிமுகமான குஷ்பு.. ஆனால் ஜோடி வேற.. தேவர் பிலிம்ஸ் கடைசி படம்..!!

இதற்கிடையே இந்த படத்தில் மதவெறி, இன கலவரம் ,தேசிய ஒருமைப்பாட்டு உள்ளிட்ட பல அம்சங்களை பாலச்சந்தர் புகுத்தியிருப்பார். பாலச்சந்தரின் ஒவ்வொரு வசனமும் வழக்கம்போல் இந்த படத்தின் பிளஸ்.

மலையாளம் பேசும் ஒருவர், தெலுங்கை தாய் மொழியாக கொண்ட ஒருவர், தமிழர், பஞ்சாபி, இந்து, முஸ்லிம் என ஒரு மினி இந்தியாவையே ஒரே வீட்டில் தங்க வைத்து நடிக்க வைத்திருப்பார். கிட்டத்தட்ட ஒரு மினி பாரத விலாஸ் படமாக இந்த படம் அமைந்திருக்கும்.

இந்த படம் சென்டிமென்ட் மற்றும் எமோஷனலாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தான் திடீரென குஷ்புவை வில்லன் கடத்துவது போன்றும், முகேஷ் அவரை காப்பாற்றுவது என வழக்கமான மசாலா கிளைமாக்ஸ் அமைந்திருக்கும்.

images 54

பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புவுடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!

இந்த படத்தின் கிளைமாக்ஸில் இந்து மற்றும் முஸ்லிம் ஆன வினித், யுவராணி ஆகியோர் காதலித்தபோது மதவெறி கொண்ட கலவரக்காரர்கள் அவர்களை சுற்றி வளைத்து கொலை செய்ய முயற்சி செய்வார்கள். அப்போது திடீரென இரண்டு பேரும் தங்கள் கைகளில் ரத்தத்தால் கீறி, நாங்கள் காதலர்கள், எங்களில் ஒருவர் முஸ்லிம் இன்னொருவர் ஹிந்து, இதோ எங்கள் ரத்தம், இதைக் கொண்டு எங்களில் யார் ஹிந்து, யார் முஸ்லிம் என கண்டுபிடித்து விட்டு அதன் பிறகு கொலை செய்யுங்கள் என்று கூறுவார்கள் அதை பார்த்ததும் அவர்களை சுற்றி இருந்த கலவரக்காரர்கள் கலைந்து போய்விடுவது போன்ற காட்சி உண்டு.

இந்த படத்தில் தான் காமெடி நடிகர் மதன் பாபு ரசிகர்கள் மத்தியில் பரவலாக தெரியப்பட்டார். இதற்கு முன்பே அவர ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் தான் அவரது சிரிப்புடன் கூடிய நடிப்பு வெளிப்பட்டது. அதன் பிறகு அவர் பல படங்களில் தனது சிரிப்பை பயன்படுத்தினார்.

இந்த படத்திற்கு சமீபத்தில் நாட்டு நாட்டு என்ற பாடலுக்காக ஆஸ்கார் விருதை பெற்ற எம் எம் கீரவாணி இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அழைத்தால் வருவாள், கம்பன் எங்கு , மன்மத லீலை, மறக்க முடியவில்லை, சொல்லடி பாரதம்மா போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படம் கடந்த 1993 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஊடகங்கள் நல்ல விமர்சனம் கொடுத்த போதிலும் வசூல் அளவில் இந்த படம் வெற்றி பெறவில்லை.

பாரதிராஜாவின் என் உயிர் தோழன்… பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

ஜாதி மதம் ஆகியவற்றை இந்த படம் பதிவு செய்திருந்தாலும், அவை அழுத்தமாக சொல்லப்படவில்லை. மொத்தத்தில் குஷ்புவை வைத்து பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் மற்றும் பாலச்சந்தர் எடுத்த ஜாதி மல்லி ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.