ரஜினி படத்தில் அறிமுகமான குஷ்பு.. ஆனால் ஜோடி வேற.. தேவர் பிலிம்ஸ் கடைசி படம்..!!

ரஜினிகாந்த் ஜோடியாக குஷ்பூ பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் அறிமுகமான ரஜினி படத்தில் ரஜினிக்கு அவர் ஜோடியாக நடிக்காமல் ரஜினியின் தம்பியாக நடித்த பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.  அந்த படம் தான் தர்மத்தின் தலைவன்.

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களை வைத்து ஏராளமான படங்களை தயாரித்த நிறுவனம் தான் தேவர் பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் தண்டாயுதபாணி பிலிம்ஸ். இந்நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்து நஷ்டத்தில் இருந்த நிலையில் நஷ்டத்தை தேற்றி கொடுப்பதற்காக ரஜினி நடித்து கொடுத்த திரைப்படம் தான் தர்மத்தின் தலைவன்.

இந்த படத்தில் பிரபு கல்லூரி மாணவராக நடித்திருப்பார். அதே கல்லூரியின் பேராசிரியராக ரஜினி நடித்தார். பிரபு மற்றும் நாசர் இடையே நடைபெறும் ஒரு சண்டையில் எதிர்பாராத வகையில் ரஜினி இறந்து விடுவார். இதனால் ரஜினியை உயிருக்கு உயிராக காதலிக்கும் சுகாசினி அதிர்ச்சி அடைவார்.

ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!

images 8

இந்த நிலையில் தான் இறந்த ரஜினி போலவே இருக்கும் லோக்கல் ரவுடி ஒருவரை பிரபு பார்ப்பார். அவரை எப்படியாவது சுகாசினியுடன் இணைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக போராடுவார். ஆனால் பேராசிரியர் ரஜினியை காதலித்த தான் அதே முகம் போன்று இருக்கும் இன்னொருவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று சுகாசினி கூறுவார். சுகாசினியின் இறுதி முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படத்தில் பிரபு ஜோடியாக ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்த குஷ்பூ அறிமுகமானார். அப்போது அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. ஆங்கிலத்தில் மற்றும் ஹிந்தியில் எழுதிக் கொடுத்துதான் வசனத்தை பேசி நடித்து கொடுத்தார். முதல் படம் என்று தெரியாத அளவுக்கு குஷ்பு சிறப்பாக நடித்தார்.

கோடிக்கணக்கில் லாபம் பெற்ற அமிதாப் படம்.. ரீமேக் செய்து தோல்வி அடைந்த ரஜினிகாந்த்..!

images 9

பேராசிரியர் மற்றும் லோக்கல் ரவுடி என்ற இரண்டு கேரக்டர்களில் ரஜினிகாந்த் அசத்தினார். காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த அவரது பேராசிரியர் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் பிரபுவும் சிவாஜியின் சாயலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நாசர், கேப்டன் ராஜு, விகே ராமசாமி உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்றால் அது இசைஞானி இளையராஜா என்று சொல்லலாம். இந்த படத்தில் இடம் பெற்ற ஆறு பாடல்களுமே முத்தான பாடல்கள். குறிப்பாக முத்தமிழ் கவியே வருக, தென்மதுரை வைகை நதி ஆகிய பாடல்கள் இன்று வரை பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாளோ.. மூன்று நாளோ.. ஓடினால் போதும்.. இறுதியில் கமல் – ரஜினிக்கு செம டஃப் கொடுத்த டி. ராஜேந்திரன்!

இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்று அதுவரை தேவர் பிலிம்ஸ் நிறுவனம் அடைந்த நஷ்டத்திற்கு ஈடாக நல்ல லாபத்தை பெற்றது. ஆனாலும் இந்த படத்துடன் தங்களது சினிமா தொழிலை தேவர் பிலிம்ஸ் குழுவினர் முடித்துக் கொண்டனர். இதற்கு பிறகு அவர்கள் படம் தயாரிக்கவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews